Supreme Court CJI : நீதிபதிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள், சிபிஐ எதுவும் செய்வதில்லை - தலைமை நீதிபதி ரமணா ஆதங்கம்
நீதிபதிகளுக்கான ஆபத்து எப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு முயற்சிகளில் எப்போதும் தொய்வு ஏற்பட கூடாது என்று இந்திய தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில், சிபிஐ மற்றும் புலனாய்வு பிரிவை (ஐபி) உச்சநீதிமன்றம் கடுமையாகச் சாடியது. அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நீதிபதிகள் முறையாக புகார்கள் அளித்தாலும் முறையாக விசாரிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தது.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நீதிபதி மீது வாகனம் ஏற்றி கொலை செய்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
நாட்டில் குண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் குற்றவியல் வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. வாட்ஸ்அப் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் நீதிபதிகள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றனர். சிபிஐ அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. சிபிஐ அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. இது,மிகவும் வருந்தத்தக்க நிலை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா தெரிவித்தார்.
மேலும், " நாட்டில் புதிய போக்கு இன்று காணப்படுகிறது. மனு தாரருக்கு பாதாகமான விளைவை ஏற்படுத்தும் வகையில் தீர்பளிக்கப்பட்டால் நீதிபதி அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார். காவல்துறை (அல்லது) புலனாய்வு அமைப்பிடம் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அவை முறையாக விசாரிக்கப்படுவதில்லை" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
"இளம் வயது நீதிபதி உத்தம் ஆனந்த்-ன் மரணத்தைப் பாருங்கள். இது முழு முழுக்க அரசுகளின் தோல்வி. நீதிபதிகளின் குடியிருப்பு பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டாமா" என்று கேள்வி எழுப்பினார்.
CJI: one or two places courts ordered CBI inquiry. Its sad to say CBI has done nothing. We expected some change in CBI attitude there has been no change. We are sorry to observe that. #SupremeCourt #Dhanbad
— Live Law (@LiveLawIndia) August 6, 2021
ஜார்க்கண்ட் மாநில தலைமை வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) இதற்கு பதிலளிக்கையில், "இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு விரைந்து செயல்படுகிறது. சம்பவம் நடைபெற்ற தினத்தன்றே சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டது. நடைபயிற்சி சென்ற நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்த இருவரை சிறப்பு புலனாய்வு படை கைது செய்தது. மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும் பரிந்துரையை மாநில அரசு வழங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.
#Jharkhand Judge death on a morning walk -
— 𝐍𝐈𝐊𝐊𝐈 𝐆𝐔𝐏𝐓𝐀 (@NIKKIGU45473309) July 29, 2021
The Chief Justice of Jharkhand High Court has issued orders asking SSP, #Dhanbad to remain present before the Court today.
This is true murder😡😡 pic.twitter.com/rRU5jKw038
முன்னதாக, தலைமை நீதிபதி ரமணாவின் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்வதாக இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் கே. வேணுகோபால் குறிப்பிட்டார். நீதிபதிகளுக்கான ஆபத்து எப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு முயற்சிகளில் எப்போதும் தொய்வு ஏற்பட கூடாது என்று தெரிவித்தார். அச்சுறுத்தல்களை சந்திக்கும் நீதிபதிகளின் பெயர் பட்டியல் தம்மிடம் இருப்பதாக தெரிவித்த அவர், நீதிபதிகளின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும், வாசிக்க:
’வீடுகளுக்கே சென்று டயாலிசிஸ்’ - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது சாத்தியமா?
Major Dhyan Chand Biography: ஹிட்லர் தலைவணங்கிய மேஜர் தயான்சந்த்... யார் இந்த ‛ஹாக்கி மந்திரவாதி’?