மாணவர்களே ரெடியாகுங்க.. உங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கப்போகுது.. இதை படிங்க!
பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் மூலம் மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் இந்த புதிய திட்டம் மூலம் கல்விக் கடன் மற்றும் வட்டி மானியம் உள்ளிட்ட பல பயன்கள் கிடைக்கப்போகிறது.
தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய மத்திய அரசு திட்டமான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் தேசிய கல்விக் கொள்கை- 2020-ன் கீழ் மற்றொரு முக்கிய முயற்சியாகும். அரசு, தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவி கிடைக்க வகை செய்யும் திட்டமாகும்.
மாணவர்களுக்கு நிதி உதவி:
இதன் கீழ், தலைசிறந்த உயர்கல்வி நிறுவனத்தில் (QHEIs) சேர்க்கை பெறும் எந்தவொரு மாணவரும் வங்கிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து பிணையம் இல்லாத, உத்தரவாதம் இல்லாத கடனைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
எளிய, மாணவர்களுக்கு ஏற்ற எளிய நடைமுறைகளின் மூலம் முற்றிலும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும் திட்டம் இதுவாகும். என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசைகளால் தீர்மானிக்கப்பட்டபடி, நாட்டின் தரமான உயர் கல்வி நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
மத்திய அரசின் புது திட்டம்:
860 தகுதிவாய்ந்த உயர்கல்வி (கியூஎச்இஐ) நிறுவனங்களில் சேரும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும். இத்திட்டம் கல்விக் கடன் மற்றும் வட்டி மானியம் உள்ளிட்ட பல பயன்களைக் கொண்டதாகும்.
Punjab National Bank applauds the initiative taken by Govt. of India in launching PM Vidyalaxmi Scheme, which entails providing the students collateral free and guarantee free education loan through simple and digital process. The Scheme is a ray of hope for bright and needy…
— Punjab National Bank (@pnbindia) November 6, 2024
உயர்கல்வித் துறை பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணையதளத்தில் மாணவர்கள் கல்விக் கடன், வட்டி மானியம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்திய இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வியை இத்திட்டம் உறுதிசெய்யும் என்பதுடன், தொழில்நுட்ப / தொழில்முறை கல்வியில் உயர்கல்வியைத் தொடர தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான ஆதரவை வழங்கும்.
இதையும் படிக்க: US Election Result 2024: மீண்டும் அமெரிக்க அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் - வெற்றிக்கு ”வாழ்த்துகள் நண்பரே” பிரதமர் மோடி டிவீட்