கோதுமை, பருப்பு உள்ளிட்ட பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு கொள்முதல் விலை அதிகரிப்பு; எவ்வளவு தெரியுமா?
MSP - Rabi Crops: கோதுமைக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ. 2,425 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே ரூ. 2,275 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2025-26 ரபி பருவப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2025-26 சந்தைப் பருவத்தில் ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 2025-26 சந்தைப் பருவத்திற்கான ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்தியுள்ளது. கடுகு குவிண்டாலுக்கு ரூ.300-ம், மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.275-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு, கோதுமை, குங்குமப்பூ, பார்லி ஆகியவற்றின் விலை குவிண்டாலுக்கு முறையே ரூ.210, ரூ.150, ரூ.140, பார்லி ரூ.130 உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை:
கோதுமைக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ. 2425 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே ரூ. 2275 ஆக இருந்தது. மனித உழைப்பு, கால்நடை உழைப்பு, இயந்திர உழைப்பு, குத்தகை வாடகை, விதைகள், உரங்கள், நீர்ப்பாசன செலவுகள், கருவிகள், பண்ணை கட்டிடங்கள் மீதான தேய்மானம், நடைமுறை மூலதனத்தின் மீதான வட்டி, பம்ப் செட்டுகளை இயக்குவதற்கான டீசல், மின்சாரம் போன்ற அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய செலவை இந்த குறைந்த பட்ச ஆதரவு விலை குறிக்கிறது.
2025-26 சந்தைப் பருவத்திற்கான கட்டாய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகரிப்பு, உற்பத்தி செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் மத்திய பட்ஜெட் 2018-19 அறிவிப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது எனவும் ரபி பயிர்களுக்கான இந்த அதிகரித்த குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதுடன், பயிர் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
The Union #Cabinet, chaired by Hon'ble Prime Minister Shri @narendramodi, has approved the Minimum Support Prices (MSP) for Rabi crops for the 2025-26 marketing season.
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) October 16, 2024
This decision reflects the government's commitment to providing farmers with fair and remunerative prices for… pic.twitter.com/AvVTPEF3Vf