Bypoll Results 2021: இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்ததா? எங்கெங்கு என்ன நிலவரம்?
By Election Results 2021: இமாசலப்பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூரின் கோட்டையாக பார்க்கப்பட்ட மண்டி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் காங்கிரஸ் புத்துயிர் பெற்றுள்ளது.
By Election Results 2021: 13 மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் இமாச்சலப்பிரதேச ஆளும் பாஜக கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது.
இமாச்சலப்பிரதேசம் | Himachal Pradesh By Election Result
அம்மாநிலத்தில் பாஜகவிடம் இருந்த மண்டி மக்களவைத் தொகுதியையும், ஜுபல் கோட்ககை (Jubbal Kotkhai) சட்டமன்ற தொகுதியையும் காங்கிரஸ் கைப்பற்றியது. மேலும், அர்கி, ஃபதேபூர் (Arki, Fatehpur) ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதியையும் தக்கவைத்துக் கொண்டது. அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்கூரின் கோட்டையாக பார்க்கப்பட்ட மண்டி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் காங்கிரஸ் புத்துயிர் பெற்றுள்ளது.
कांग्रेस की हर जीत हमारी पार्टी के कार्यकर्ता की जीत है।
— Rahul Gandhi (@RahulGandhi) November 2, 2021
नफ़रत के ख़िलाफ़ लड़ते रहो। डरो मत!
Every victory for the Congress is a victory of our party worker.
Keep fighting hate. No fear! #BypollResults2021
தெலுங்கானா | Telangana By Election Results 2021
மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், ஆளும் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியில் இருந்து விலகி இடைத்தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்த ஈடலா ராஜேந்தர் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிலா டிஆர்எஸ் கட்சி வேட்பாளரை 24,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தெலுங்கானாவில், 2018ம் ஆண்டு நடைபெற்ற துபாக் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு (Dubbak) பாஜக அபரிகரமான வளர்ச்சியுடன் பயணித்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் அதிகப்படியான இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாய்டு தலைமயிலான தெலுங்கு தேசம் கட்சியை சந்திரசேகர் ராவ் ஓரங்கட்டுவதே பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி மேற்கொண்ட அதே அரசியல் தவறை சந்திரசேகர் ராவ் செய்து வருவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
கர்நாடகா | Karnataka Bypoll Results
கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.
ஹங்கல் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், மாநில முதல்வர் பொம்மாயி சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த சிண்டிகி தொகுதியில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
முன்னதாக, கட்சி மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து,மாநிலத்தின் முதல்வராக சோமப்ப பொம்மை தேர்வு செய்யப்பட்டார்.
Let us go by the wishes of the people of Karnataka...They are looking towards change: Karnataka Congress President DK Shivakumar on Congress winning Hangal Assembly seat#BypollResults2021 pic.twitter.com/Pd46UYb0u9
— ANI (@ANI) November 2, 2021
Congratulations to wise electorate of Hangal Assembly for the stupendous victory of @INCIndia !
— Randeep Singh Surjewala (@rssurjewala) November 2, 2021
The constant service of people by @srinivasmane & immeasurable hard work of Congress workers& leaders has proved that Karnataka yearns for “change”.
BJP’s exit is written on the wall
தனது சொந்த மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்ததன் மூலம் சிலபல அரசியல் நெருக்கடிகளுக்கு சோமப்ப பொம்மை ஆளாகியுள்ளார். ஹங்கல் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து உயிர்ப்பில் வைத்துக் கொள்ள வைக்கும் என்று நம்பப்படுகிறது.
மத்தியப் பிரதேசம்: மத்தியபிரதேச மாநிலம் காந்துவா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பி.ஜே.பி தக்க வைத்துக் கொண்டது. மேலும், காங்கிரஸ் கட்சியிடம் இருந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. மறுபுறம், பபாஜகவிடம் இருந்த ராஜகோன் (Rajgon) தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது.
இந்த இடைத்தேர்தலின் மூலம் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது அரசியல் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். பாஜகவில் மதச்சார்பின்மைவாதியாகவும், மிதவாதியாகவும் அறியப்பட்ட இவர்,சமீபத்திய நாட்களில் தீவிர இந்துத்துவ சித்தாந்தங்களை முன்னெடுத்து வருகிறார். லவ் ஜிகாத், தூய்மைவாதம் (நெட்ப்ளிக்ஸ் தடை, தீபாவளி விளம்பரங்களுக்குத் தடை, நகை விளம்பரத்துக்குத் தடை) போன்ற பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்.
அசாம்: அசாம் மாநிலத்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்கம்: மேற்குவங்கத்தில் நடைபெற்ற நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் பமதா பேனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான்: பாஜக கைவசம் இருந்த தரியவாட் (Dhariayawad) சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது. மேலும், வல்லிபாநகர் சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டது.
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே அதிகாரப்போக்கு காணப்படும் நிலையில், இந்த வெற்றி அசோக் கெலாட்டின் அரசியல் செல்வாக்கை அதிகரித்திருப்பதாக நம்பப்படுகிறது.