(Source: ECI/ABP News/ABP Majha)
Budget Session 2022 LIVE: பட்ஜெட் கூட்டத் தொடர் 2022: தனது உரையை தொடங்கினார் குடியரசுத் தலைவர்
Budget Session 2022 LIVE Updates: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரை தொடர்பான உடனுக்குடன் தெரிந்து கொள்ள இங்கே பார்க்கவும்
LIVE
Background
Budget Session 2022 LIVE Updates:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்ட தொடர் என்பதால் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து நாளை மத்திய பட்ஜெட் 2022-23 ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை வழங்கவே திருமண வயது மாற்றம்: குடியரசுத் தலைவர்
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை வழங்கும் நோக்கில் மத்திய அரசால் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது-குடியரசுத் தலைவர்
நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது - நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை.
#BREAKING | நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது
— ABP Nadu (@abpnadu) January 31, 2022
- நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரைhttps://t.co/wupaoCzH82 | #Budget2022 #BudgetSession #BudgetwithABPNadu pic.twitter.com/M0XGsPPAbt
நாட்டின் கல்வி திட்டங்களை குறித்து பேசும் போது திருக்குறளை மேற்கோள் காட்டிய குடியரசு தலைவர்
நாட்டின் கல்வி திட்டங்களை குறித்து பேசும் போது திருக்குறளை மேற்கோள் காட்டிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..
நாட்டின் கல்வி திட்டங்களை குறித்து பேசும் போது திருக்குறளை மேற்கோள் காட்டிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்https://t.co/wupaoCzH82 | #Budget2022 #BudgetSession #BudgetwithABPNadu pic.twitter.com/d60QuX775D
— ABP Nadu (@abpnadu) January 31, 2022
அம்பேத்கரின் கோட்பாடுகளை என்னுடைய அரசு பின்பற்றி வருகிறது: குடியரசுத் தலைவர்
அம்பேத்கரின் கோட்பாடுகளில் ஒன்றான சமத்துவம், சுதந்திரம் மற்றும் ஒற்றுமையான சமூகத்தை என்னுடைய அரசு பின்பற்றி வருகிறது என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் பலருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது: குடியரசுத் தலைவர்
ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் பலருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பல ஏழைகள் பயன் அடைந்துள்ளனர் என குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.