மேலும் அறிய

Breaking LIVE: கனியாமூர் பள்ளியை மறுசீரமைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அனுமதி

Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.

LIVE

Key Events
Breaking LIVE:  கனியாமூர் பள்ளியை மறுசீரமைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அனுமதி

Background

பெரியாரின் 144ஆவது பிறந்தநாளையொட்டி சென்னையிலுள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (செப்.17) மரியாதை செலுத்துகிறார்.

அண்ணாசாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலினுடன் திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளனர்.

Periyar Quotes: ஈரோடு மாவட்டத்தில், 1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்த வெ. ராமசாமி எனும் சமூகநீதி நாயகன் தனது சமூக சீர்திருத்த பயணத்தில் கூறிய மிகவும் முக்கியமான பொன் மொழிகளை அவரது 144வது பிறந்த நாளான இன்று காணலாம். 

* விதி என்பது மிதிக்கப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் கொதித்து எழாமல் இருக்க உண்டாக்கப்பட்ட சதியாகும்!

* யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொல்லி இருந்தாலும் உனது புத்தில்லும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!

* கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பறப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. கடவுளை மற! மனிதனை நினை!

* திருமணம் என்பது வயது வந்த, அறிவு வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்பந்தபட்ட கரியமே தவிர மற்ற யாருக்கும் வேறு எதற்கும் கட்டுப்பட்டதல்ல!

* எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரை பார்த்ததுகூட இல்லைங்க!

* பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்கமான வாழ்வு!

 * உன் சாஸ்த்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது; அதை சிந்தி!

* பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணையமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்!

* கல்வி அறிவும், சுயமரியாதையும், பகுத்தறிவும் தான் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்!

* விதியை நம்பி மதியை இழக்காதே!

* ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறாரோ, அதேபோல் தான் பிறரிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதே ஒழுக்கமாகும்!

* பெண்களுக்கு சொத்துரிமை இல்லை என்பது பெண்கள் முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பதோடு, பொதுவாக இந்து சமூக முன்னேற்றத்திற்கே கேடாயும் இருக்கிறது!

*  முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான்  ஜனநாயகம்!

* ஒரு புலி இன்னொரு புலியைக் கொல்வதில்லை, ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தைக் கொல்வதில்லை ஆனால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொல்கிறான் எனவே மனிதன் தான் மிகவும் அபாயகரமானவன்!

* ஒரு நாடு சுபிட்சத்துடன் இருக்க வேண்டுமானால், அந்த நாட்டின் மக்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்! 

* தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்!

*மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானமற்ற ஒருவருடன் போராடுவது கடினமான காரியம்! 

* மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்!

* எந்த மனிதனும் எனக்கு மேலானவன் இல்லை, அதேபோல் எனக்கு கீழானவனும் இல்லை!

*  பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து!

* நான்கு ஆண்கள், ஒரு பெண் இருக்கும் குடும்பத்தில், முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்!

* உன்னை யோசிக்க வைப்பதுதான் என்னுடைய நோக்கமே தவிர, என்னைப் பின்பற்று உன்னை மாற்றிக்கொள் என்பது அல்ல, நீ நீயாகவே இரு!

* மனிதன் பெண்ணை தன்னுடைய சொத்தாக நினைக்கிறனே தவிர, தன்னைப்போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிராக மதிப்பதில்லை!

19:52 PM (IST)  •  17 Sep 2022

கனியாமூர் பள்ளியை மறுசீரமைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அனுமதி

கனியாமூர் பள்ளியை மறுசீரமைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். பள்ளி கட்டடங்களை சீரமைப்பது தொடர்பாக 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கட்டடங்களை சீரமைக்க ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.

13:59 PM (IST)  •  17 Sep 2022

Breaking LIVE: பள்ளி மாணவர்களிடம் தீண்டாமை... கடைக்கு சீல்... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2 பேர் கைது

பள்ளிக் குழந்தைகளிடம் தீண்டாமையில் ஈடுபட்ட விவகாரத்தில் பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மகேஸ்வரனின் பெட்டிக்கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

13:56 PM (IST)  •  17 Sep 2022

Breaking LIVE: பள்ளி மாணவர்களிடம் தீண்டாமை... தின்பண்டம் வழங்க மறுத்த கடைக்காரர் உள்பட இருவர் கைது!

தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளத்தில் பள்ளிக்குழந்தைகளிடம் தீண்டாமை பார்க்கும் வீடியோ முன்னதாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவ்விவகாரத்தில் தொடர்புடைய கடை உரிமையாளர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12:20 PM (IST)  •  17 Sep 2022

வேளச்சேரியில் புதிய மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர்

வேளச்சேரியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் 2வது பகுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 

11:52 AM (IST)  •  17 Sep 2022

Breaking LIVE: உலக மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் விரைவில் வெளியீடு....முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

"பெரியார் திடல் எனது தாய் வீடு; இங்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சி பெறுகிறேன். பெரியாரின் சிந்தனைகளை மொழிப்பெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிட இருக்கிறோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Thalapathy Rerelease :  ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Thalapathy Rerelease : ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
"நீங்கள் வரும்போது மட்டும்தான் உணவு நன்றாக இருக்கும்" - ஆட்சியரிடம் புகார் அளித்த பழங்குடி மாணவர்கள்
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Embed widget