Breaking LIVE : அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
சென்னையில் 103வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
மின்கட்டணம் - தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை
மின்கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை
போதைப்பொருள் பரவலுக்கு ஒன்றிய அரசுதான் காரணம் : பொன்முடி
போதைப்பொருள் இந்த அளவுக்கு பரவியதற்கு காரணமே ஒன்றிய அரசுதான் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசாணை வெளியீடு
ஐஐடி, ஐஐஎம்-களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்பது தொடர்பாக அரசாணை வெளியீடு
திரையரங்க பார்க்கிங் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய ஆணை
சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு