மேலும் அறிய

Breaking LIVE: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

LIVE

Key Events
Breaking LIVE: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

Background

Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 157வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 157வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.

இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

21:42 PM (IST)  •  25 Oct 2022

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

19:06 PM (IST)  •  25 Oct 2022

இந்தியாவில் சூரிய கிரகணம் நிறைவு..!

இந்தியாவில் தென்பட்ட சூரிய கிரகணம் நிறைவடைந்தது. பொதுமக்கள் பல இடங்களிலும் தொலைநோக்கி மூலம் இதை கண்டுகளித்தனர்.

17:46 PM (IST)  •  25 Oct 2022

Breaking LIVE: சென்னையில் தென்பட்ட சூரிய கிரகணம்!

உலக அளவில் பகுதியளவு சூரிய கிரகணம் சென்னையில் தென்பட்டது. 

17:06 PM (IST)  •  25 Oct 2022

Breaking LIVE : தொடங்கியது பகுதியளவு சூரிய கிரகணம்!

அரிய வான் நிகழ்வான பகுதியளவு சூரிய கிரகணம் தொடங்கியது. இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளில் தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு ஜாஷ்மீர், அமிர்தசரஸ் ஆகிய பகுதிகளில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

16:29 PM (IST)  •  25 Oct 2022

Breaking LIVE : கிரகணத்தின்போது தரிசனத்திற்கு திருத்தணி கோயில் திறந்திருக்கும்!

இன்று நடைபெறும் பகுதி நேர சூரிய கிரணத்தின்போது பல்வேறு கோயில்களில் நடை சாத்தப்படும். இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலின் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு கோயில் சுத்தம் செய்யப்பட்டு, மறுநாள் காலை திற்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Mudhalavar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
Mudhalavar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Mudhalavar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
Mudhalavar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
Sivakarthikeyan :
Sivakarthikeyan : "தமிழ் மக்களுக்கு உண்மையாக இருப்பேன்" ..அமரன் வெற்றிவிழாவில் எஸ்.கே கொடுத்த செம ஸ்பீச்
Thalapathy 69 : சன் பிக்ச்சர்ஸுக்கு புதிய சவால்...விஜயின் அடுத்த படம் எத்தனை கோடிக்கும் விற்பனை தெரியுமா?
Thalapathy 69 : சன் பிக்ச்சர்ஸுக்கு புதிய சவால்...விஜயின் அடுத்த படம் எத்தனை கோடிக்கும் விற்பனை தெரியுமா?
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Embed widget