மேலும் அறிய

Breaking News Live: எடப்பாடி பழனிச்சாமிக்கு பன்னீர்செல்வம் கடிதம்

Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தகவல்களாக உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
Breaking News Live: எடப்பாடி பழனிச்சாமிக்கு பன்னீர்செல்வம் கடிதம்

Background

நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் மற்றும் இருதயம்  பிரச்சனை காரணமாக நேற்று நள்ளிரவு உயிரிழந்த நிலையில் சினிமாத்துறையினர் பலரும் மீனாவுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி வருகின்றனர்.குழந்தை நட்சத்திரம் முதல் மகளை சினிமாவில் அறிமுகம் செய்தது வரை சினிமாவில்  மீனா நீண்டகாலமாக பயணித்து வருகிறார்.

1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி பிறந்த நடிகை மீனா 1982 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி நடித்த நெஞ்சங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான ரஜினியின் எங்கேயே கேட்ட குரல், தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு ரஜினி நடித்த “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தின் மூலம் மீனா தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனம் பெற ஆரம்பித்தார். அதன்பின் குழந்தை நட்சத்திரமாக 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் 1990 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். 

அவருக்கு ராஜ்கிரண் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு திரும்பி பார்க்க முடியாதபடி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினியுடன் எஜமான், முத்து, வீரா, குசேலன், அண்ணாத்த ஆகிய படங்களிலும், கமலுடன் அவ்வை சண்முகி, அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

விஜய்யுடன் அவர் படங்களில் ஜோடியாக நடிக்காவிட்டாலும் ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். தமிழில் அவர் நடித்த படங்களில் நாட்டாமை, பாரதி கண்ணம்மா, பொற்காலம், சேதுபதி ஐபிஎஸ்,வானத்தைப் போல, த்ரிஷ்யம்  உள்ளிட்ட படங்கள் மிக முக்கியமானவை. தமிழ் தவிர்த்து மலையாளம்,  தெலுங்கு திரையுலகிலும் அவர் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். 

இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார்.

மீனாவின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், அவரின் கணவர் வித்யாசாகர் கடுமையான நுரையீரல் பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று நேற்று உயிரிழந்தார். 

48 வயதாகும் வித்யாசாகரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக மீனாவுக்கு தெரிவித்து வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

21:23 PM (IST)  •  29 Jun 2022

கட்சியினுடைய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பன்னீர்செல்வம் கடிதம்

எடப்பாடி பழனிச்சாமிக்கு பன்னீர்செல்வம் கடிதம்

உள்ளாட்சி   தேர்தல் படிவத்தில் கையெழுத்திட ஓ பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். இணை  ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட தயாரா  என கடிதத்தில் கேட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

A,&b பார்ம் இரண்டிலும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கையெழுத்திட்டால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் நாளை பிற்பகல் 3 மணிக்குள் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தவறினால் தொண்டர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் யார் என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள்

21:16 PM (IST)  •  29 Jun 2022

மகாராஷ்டிராவில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை- உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிராவில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சிவசேனா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

18:53 PM (IST)  •  29 Jun 2022

நான் துரிதமாக செயல்பட அமைச்சரவை தான் காரணம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வேலூரில் 32.89 கோடி மதிப்பிலான 50 புதிய நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து, வேலூர் கோட்டை மைதானத்தில் பேசுகையில், நான் துரிதமாக செயல்பட அமைச்சரவை தான் காரணம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்துள்ளார். 

18:44 PM (IST)  •  29 Jun 2022

அவுரங்காபாத் பெயர் சாம்பாஜி நகர் என பெயர்மாற்றம்- மகாராஷ்டிரா அரசு

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரத்தின் பெயரை சாம்பாஜி நகர் என்றும், உஷ்மானாபாத் பெயரை தாராஷிவ் என்றும் பெயர் மாற்றம் செய்ய மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

17:18 PM (IST)  •  29 Jun 2022

எல்.இ.டி. விளக்குகள், ஹீட்டர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி அதிகரிப்பு..!

எல்.இ.டி. விளக்குகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், ஹீட்டர்களுக்கு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பேனா மை, கத்தி ப்ளேடு ஆகியவற்றிக்கும் ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டுள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்” ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
Embed widget