Breaking News Tamil LIVE: அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்- கே.பி.முனுசாமி
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
அக்னி பாதை திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள் எனவும் இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அக்னி பாதை திட்டம்: ஒரு பார்வை
இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது மொத்த ராணுவப் படைகளில் 3 சதவீதம் மட்டுமே. இதனால் ராணுவத்தின் பிற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
17.5 வயது முதல் 23 வயது வரையிலான ஆண்களும் பெண்களும் அக்னி பாதை திட்டத்தில் சேரலாம். ஏற்கெனவே உள்ள கல்வித் தகுதி, உடல் தகுதி நடைமுறைகள் பின்பற்றப்படும்.
அக்னிபத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரர்கள் பணியாற்றுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும். 4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.
என்ன ஊதியம்?
முதல் ஆண்டு ஊதியம் பிடித்தம் போக கைக்கு கிடைப்பது பிடித்தம் அரசு செலுத்துவது
முதல் ஆண்டில் சம்பளமாக ரூ.30,000 (பிடித்தம் போக ரூ.21,000), 2 ஆம் ஆண்டில் ரூ.33 ஆயிரம் (பிடித்தம் போக ரூ.23,100), 3 ஆம் ஆண்டில் ரூ.36,500 (பிடித்தம் போக ரூ.25,580), 4 ஆம் ஆண்டில் ரூ.40,000 (பிடித்தம் போக ரூ.28,000) வழங்கப்படும். பிடித்தம் செய்யப்படும் ரூ.5.02 லட்சம் சேவா நிதிக்கு செல்லும். அதே அளவு நிதியை மத்திய அரசும் செலுத்தும். இதன்மூலம் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் பயிற்சி பெறுபவர்களுக்கு கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பிற பயன்கள்
பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். பணியின்போது மரணமடைந்தால் ரூ.44 லட்சம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசு என்ன சொல்கிறது?
அக்னிபத் ஆள்சேர்ப்புக் கொள்கையின் முக்கிய நோக்கம், இந்திய ராணுவத்தில் அதிகரித்து வரும் ஊழியர்களுக்கான ஊதியத்தையும், ஓய்வுதியச் செலவுகளையும் குறைப்பதுதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்களின் துடிப்பும், திறமையும் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தகுதி அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதன்மூலம் தகுதி உள்ளோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய திட்டம் பல்வேறு உலக நாடுகளில் உள்ளதுதான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல், சீனா, அமெரிக்கா, ஃப்ரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் ராணுவ மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு, அக்னிபத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.
சென்னையில் பரவலாக மழை!
சென்னையில் கோடம்பாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம், கோயம்பேடு, மதுரவாயல், ஆயிரம் விளக்கு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் பரவலாக மழை
சென்னையில் கோடம்பாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம், கோயம்பேடு, மதுரவாயல், ஆயிரம் விளக்கு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்- கே.பி.முனுசாமி
அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி கூட்டம் நடைபெறும் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க, ஓபிஎஸ் வலியுறுத்திய நிலையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்
அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்- கே.பி.முனுசாமி
அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி கூட்டம் நடைபெறும் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க, ஓபிஎஸ் வலியுறுத்திய நிலையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்
அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் - இபிஎஸ் தரப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி, வரும் 23ஆம் தேதி நடைபெறும் எனவும், கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்