Breaking LIVE: ’அரசு அலுவலகங்கக் கட்டடங்களை பொது மக்கள் எளிதில் வந்து செல்லும்படி கட்டுங்கள்’ - உயர் நீதிமன்றம்
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Background
நெருங்கிய புயல்.. அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை..?
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர்,திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிமை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை கார் வெடிப்பு வழக்கு - மேலும் மூன்று பேர் கைது
உமர்பாரூக், தவுபிக், பெரோஸ் கான் ஆகிய மூன்று பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இவ்வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவர் கைது செய்துள்ளனர்.
Breaking LIVE: ’அரசு அலுவலகங்கக் கட்டடங்களை பொது மக்கள் எளிதில் வந்து செல்லும்படி கட்டுங்கள்’ - உயர் நீதிமன்றம்
அரசு அலுவலகங்கள் கட்டப்படும்போது பொது மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் கட்டப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
காட்டுப்பகுதிக்குள் கட்டப்பட்ட கட்டடத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தை அமைக்க தடை விதிக்கக்கோரிய வழக்கில் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Breaking LIVE: சென்னைக்கு 770 கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
”சென்னைக்கு 770 கி.மீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. சென்னையை நெருங்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறும். மணிக்கு 15 கி.மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிசம்பர் 9ஆம் தேதி மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Breaking LIVE: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழ்நாடு வந்தடைந்த தேசியப் பேரிடர் மீட்புப் படை
கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவாரூர், தஞ்சாவூருக்கு மீட்புப் படையினர் வந்தடைந்தனர்.
அரக்கோணத்தில் இருந்து 25 பேர் கொண்ட தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு வந்தடைந்தனர்.

