Breaking LIVE : அடுத்த 3 மணிநேரத்தில் 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..!
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Background
பாஜகவினருக்கு ஐகோர்ட் நீதிபதிகள் எச்சரிக்கை..!
வாகன நெம்பர் ப்ளேட்டுகள் விதிமுறைக்கு உட்பட்டே இருக்க வேண்டும், தலைவர்கள் படம் இருக்க கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
அறப்போர் இயக்கத்திற்கு பேசத்தடை..!
இபிஎஸ் குறித்து அவதூறாக பேச அறப்போர் இயக்கத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவில் மருத்துவ மையம் முதல்வர் தொடங்கி வைத்தார்..!
இந்து அறநிலைத்துறை சார்பாக தமிழ்நாட்டில் உள்ள மேலும் ஐந்து கோவில்களில் மருத்துவ மையத்தினை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கொடநாடு வழக்கு விசாரணை..!
கொடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணை உதகை மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்பட்ட பின்னர் வந்துள்ள முதல் கட்ட விசாரணை என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இன்றைய தங்க விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 உயர்ந்து ரூ. 40,080 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 55 உயர்ந்து ரூ.5,010 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.