மேலும் அறிய

Breaking LIVE : உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 2 தினங்களுக்கு கொட்டப்போகுது மழை..!

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

LIVE

Key Events
Breaking LIVE : உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 2 தினங்களுக்கு கொட்டப்போகுது மழை..!

Background

தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 183வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.

இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

16:46 PM (IST)  •  20 Nov 2022

மருத்துவ விடுப்பு சான்றிதழுக்கு புதிய விதிமுறைகள்..!

வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் மருத்துவ அறிக்கைகளை தீர ஆராய்ந்த பிறகே மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்.

10:41 AM (IST)  •  20 Nov 2022

CYCLONE ALERT; நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

நாகை துறைமுகத்தில் 1ஆம் எண் எச்சரிக்கை புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

09:04 AM (IST)  •  20 Nov 2022

வந்துட்டேன்னு சொல்லு.. வாக்கெடுப்பு நடத்தி டிரம்பை மீண்டும் ட்விட்டருக்கு கொண்டுவந்த மஸ்க்..!

Twitter : ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ட்விட்டரில் சேர்க்கப்பட்டுள்ளார். 

09:01 AM (IST)  •  20 Nov 2022

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 2 தினங்களுக்கு கொட்டப்போகுது மழை..!

வங்கக் கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

07:25 AM (IST)  •  20 Nov 2022

அதிமுக பொதுக்குழு விவகார வழக்கு..!

அதிமுக பொதுக்குழு விவகார வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget