மேலும் அறிய

Breaking News LIVE:தி.மு.க. எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டுவீச்சு - பெரும் பரபரப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE:தி.மு.க. எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டுவீச்சு - பெரும் பரபரப்பு

Background

Petrol Diesel Price: சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி 13 மாதங்களை கடந்து  விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம். 

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 9) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 414வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

21:37 PM (IST)  •  09 Jul 2023

தி.மு.க. எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டுவீச்சு - பெரும் பரபரப்பு

கடலூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஐயப்பன் பங்கேற்ற சுப நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

15:12 PM (IST)  •  09 Jul 2023

கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; திருப்பதியில் சாமி தரிசனம் செய்து திரும்பிய போது 6 பேர் உயிரிழப்பு

விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

12:44 PM (IST)  •  09 Jul 2023

latha Rao : சின்னத்திரை நடிகை லதா ராவ் வீட்டில் திருட்டு

சின்னத்திரை நடிகர் தம்பதியான லதா ராவ் - ராஜ்கமல் வீட்டில் திருட்டு போயுள்ளது தெரியவந்துள்ளது

11:37 AM (IST)  •  09 Jul 2023

தமிழ்நாட்டில் நீடிக்கும் மழை.. தேவக்கோட்டையில் 6 செ.மீ மழை பதிவு..

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்) 6, சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்), சின்னக்கலர் (கோவை மாவட்டம்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

09:31 AM (IST)  •  09 Jul 2023

தூயபனிமயமாத கோயில் திருவிழா.. சென்னை - தூத்துகுடி இடையே சிறப்பு ரயில்கள்..

தூத்துக்குடி தூயபனிமய மாதா தங்கத் தேரோட்டத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இந்த சிறப்பு ரயில் (எண் 06005) 03.08.2023 அன்று சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். இதுபோல் ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று சிறப்பு ரயில் (06006) தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு சென்னை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruma On DMK : ”பஞ்சமி நிலம் மீட்பு என்னாட்சு?” திமுகவுக்கு விசிக CHECK புது ரூட்டில் திருமா!MP Ravikumar slams PM Modi |உ.பி-க்கு 34000 கோடி,நமக்கு வெறும் 7000 கோடியா?மோடியை விளாசும் I.N.D.I.ABengaluru Pigeon Thief | புறாவை வைத்து 30 லட்சத்தை சுருட்டிய திருடன்! பெங்களூரை அலறவிட்ட கேடி!TVK Vijay vs BJP | பாஜகவிடம் பணிந்த விஜய்? ஆயுத பூஜைக்கு வாழ்த்து! காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
Chennai Train Accident:  கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
Chennai Train Accident: கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீபாராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்! எங்கசார் உங்க கொள்கை ?
”கொடி கம்பத்திற்கு தீபாராதனை” அலுவலகம் முழுவதும் பூஜை - என்னதான் விஜயின் கொள்கை ?
Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Train Cancel: கவரப்பேட்டை விபத்து!  18 ரயில்கள் இன்று ரத்து - எந்தெந்த ட்ரெயின்? முழு பட்டியல்
Train Cancel: கவரப்பேட்டை விபத்து! 18 ரயில்கள் இன்று ரத்து - எந்தெந்த ட்ரெயின்? முழு பட்டியல்
Embed widget