மேலும் அறிய

Breaking News LIVE: தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE:  தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை  450 நாட்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.

பெட்ரோல், டீசல்:

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 457வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

20:03 PM (IST)  •  21 Aug 2023

Breaking News LIVE: தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

தனியார் கல்லூரி நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ், ”அமைச்சர் உதயநிதி இளைஞரணி செயலாளராக தற்போது இருந்தாலும், எங்களை பொறுத்தவரை அவர் தலைவராக தெரிகிறார். தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் உதயநிதி தான்” என தெரிவித்துள்ளார். 

14:43 PM (IST)  •  21 Aug 2023

Breaking News LIVE: காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வேண்டுகோள்

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கூட்ட வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநிறுத்தவும், விவசாயிகள் நலன் காக்கவும் நடவடிக்கைகள் தேவை என அவர் தெரிவித்துள்ளார். 

12:43 PM (IST)  •  21 Aug 2023

Breaking News LIVE: 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..!

திருச்சி, திண்டுக்கல், மதுரை உட்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

12:37 PM (IST)  •  21 Aug 2023

Breaking News LIVE: சென்னையில் மாணவர்களிடையே மோதல் 

சென்னை வேளச்சேரியிலுள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் - நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

12:25 PM (IST)  •  21 Aug 2023

Breaking News LIVE: மேகதாது அணைதான் நிரந்திர தீர்வு : கர்நாடகா மனு

மேகதாது அணை அமைக்க அனுமதி வழங்குவதுதான் காவிரி விவகாரத்தில் நிரந்திர தீர்வுக்கு வழிவகுக்கும். மேகதாது அணை அமைத்தால் கூடுதல் தண்ணீரை சேமித்து வைத்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கமுடியும் - கர்நாடகா

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget