Breaking News LIVE: “வரும் 24ஆம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டம்; தவறாமல் பங்கேற்க வேண்டும்” - தேமுதிக அறிவிப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர். வழக்கமாக நாடாளுமன்ற கூட்டம் ஆண்டுக்கு மூன்று முறை நடக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்ட்தொடர், குளிர்கால கூட்டத்தொடர். அந்த வகையில் பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்கனவே நடைபெற்று முடிந்தது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற கூட்டத்திற்கான தேதிகளை இறுதி செய்தது.
இன்று கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அலுவலகள் குறித்து சபா நாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று அலுவல் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தேசிய நிதித் தகவல் பதிவேடு, டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா, திவால் திருத்தச் சட்டம் என 31 மசோதாக்கள் நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் டெல்லியில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டம், மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக எதிர்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய முன் தினம் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ’INDIA’ என்ற கூட்டணி அமைத்தது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் நாட்டில் நடைபெறும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இந்த தொடர் சுமூகமாக நடதுவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர், பெகாசஸ் விவகாரத்தாலும் 2022ஆம் ஆண்டு கூட்டத்தொடர் விலைவாசி உயர்வு பிரச்சனையாலும் பெரும் பாதிப்படைந்தது. இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், நாடாளுமன்ற கூட்டு விசாரணை நடத்த வேண்டும் எதிர்க்கட்சிகள் முதல் பாதியை முடக்கியது.
பிரிட்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டனர். இதனால், பட்ஜெட் கூட்டதொடரும் பெரும் பாதிப்பை சந்தித்தது. பல முக்கியமான சட்டங்கள் விவாதிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டன. இதனால் இன்று கூடும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Senthil Balaji Case: மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிங்க.. செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட திட்டம்!
மணிப்பூர் விவகாரம் - 4 பேர் கைது..
மணிப்பூர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
மணிப்பூர் சம்பவத்திற்கு சீமான் கண்டனம்
மணிப்பூரில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடியின பெண்கள் அல்ல, பாரத தாய் தான் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் விடுவிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரனை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் இருந்து அமைச்சர், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோரை விடுவித்து விருதுநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக காலத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு.
நாடளுமன்ற கூட்டத்தொடர் - இரு அவைகளும் ஒத்திவைப்பு
மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கூட்டுப்பாலியல் வன்கொடுமை தொடர்பாக உடனே விவாதிக்க வேண்டும் என, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
Breaking News LIVE: பிரிஜ் பூஷண் மீதான ஜாமீன் மனுவின் தீர்ப்பு ஒத்துவைப்பு..!
பாலியல் புகாரில் முன்னாள் WFL தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் ஜாமீன் மனு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.