மேலும் அறிய

Breaking News LIVE: அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை..!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE: அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை..!

Background

Petrol Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 13 மாதங்களை கடந்து  விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம். 

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 16) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 421வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

13:34 PM (IST)  •  16 Jul 2023

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு..!

மதுரை உசிலம்பட்டியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் வீட்டிற்கு வந்த பின்னர் உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் தாக்கியதால் தான் உயிரிழந்தார் என உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

13:20 PM (IST)  •  16 Jul 2023

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

அமெரிக்காவின் வடக்கு கண்டத்தில் உள்ள அலாஸ்காவில் மிகவும் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவாகியுள்ளது. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

10:15 AM (IST)  •  16 Jul 2023

வெளியானது மருத்துவபடிப்பு சேர்க்கை தரவரிசை..!

தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டார். 

09:32 AM (IST)  •  16 Jul 2023

இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்..!

தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகள் சந்திந்து வரும் தொடர் நஷ்டத்தினை தவிர்க்க, தென் இந்திய நூற்பாலைகளின் கூட்டமைப்பு சார்பில் நேற்று அதாவது  ஜூலை 15ம் தேதி முதல் சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் காலவரையற்ற உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தத்தை தொடங்கின. இந்நிலையில் இரண்டாவது நாளாக இந்த போராட்டம் தொடர்கிறது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Train Accident:  கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
Chennai Train Accident: கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
TN Rains: அடுத்த 1 மணி நேரம்! 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை - உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா?
TN Rains: அடுத்த 1 மணி நேரம்! 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை - உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா?
Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruma On DMK : ”பஞ்சமி நிலம் மீட்பு என்னாட்சு?” திமுகவுக்கு விசிக CHECK புது ரூட்டில் திருமா!MP Ravikumar slams PM Modi |உ.பி-க்கு 34000 கோடி,நமக்கு வெறும் 7000 கோடியா?மோடியை விளாசும் I.N.D.I.ABengaluru Pigeon Thief | புறாவை வைத்து 30 லட்சத்தை சுருட்டிய திருடன்! பெங்களூரை அலறவிட்ட கேடி!TVK Vijay vs BJP | பாஜகவிடம் பணிந்த விஜய்? ஆயுத பூஜைக்கு வாழ்த்து! காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Train Accident:  கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
Chennai Train Accident: கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
TN Rains: அடுத்த 1 மணி நேரம்! 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை - உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா?
TN Rains: அடுத்த 1 மணி நேரம்! 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை - உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா?
Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
Mohammed Siraj:அப்போ பேட்ஸ்மேன்கள்..இப்போ ரவுடிகள் ஜாக்கிரதை! டிஎஸ்பி அவதாரம் எடுத்த சிராஜ்
Mohammed Siraj:அப்போ பேட்ஸ்மேன்கள்..இப்போ ரவுடிகள் ஜாக்கிரதை! டிஎஸ்பி அவதாரம் எடுத்த சிராஜ்
ரீல்ஸ் பார்த்துகொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் பணி நீக்கம்: போக்குவரத்து கழகம் அதிரடி
ரீல்ஸ் பார்த்துகொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் பணி நீக்கம்: போக்குவரத்து கழகம் அதிரடி
Ajith - Trisha: தீயா இருக்கு லுக்! ஹாலிவுட் ரேஞ்சில் அஜித், அழகுப்பதுமையாக த்ரிஷா! குட் பேட் அக்லியில் காத்திருக்கும் ட்ரீட்!
Ajith - Trisha: தீயா இருக்கு லுக்! ஹாலிவுட் ரேஞ்சில் அஜித், அழகுப்பதுமையாக த்ரிஷா! குட் பேட் அக்லியில் காத்திருக்கும் ட்ரீட்!
Embed widget