மேலும் அறிய

Breaking News LIVE: நேபாளத்தில் 6 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் மாயம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE: நேபாளத்தில் 6 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் மாயம்

Background

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 17 மணி நேர சோதனைக்கு பின், அவரை கைது செய்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் ஓமந்துரார அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். பின் நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவிரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு பை பாஸ் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் தொடர் சிகிச்சையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது என கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு முதலில் நீதிபதிகள் நிஷா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகளில் மாறுபட்ட தீர்ப்பு:

நீதிபதி நிஷா பானு, “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம். எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம்” என தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்றக் காவலில் இருக்கும் நாட்களாகக் கருத முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். 

மூன்றாவது நீதிபதி விசாரணை:

இந்நிலையில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தெரிவித்திருந்தார். ஜூலை 6 ஆம் தேதி நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வில் விசாரணை நடந்தது.

பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் வாதாட வர உள்ளதாக கூறி,  வழக்கை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் கோரப்பட்டது. இதனையடுத்து 3வது நீதிபதி சி.வி கார்த்திகேயன் இந்த வழக்கை ஒத்தி வைத்தார். வழக்கை எப்போது விசாரிக்கலாம் என குழப்பம் இருந்த நிலையில், ஜூலை 11 ஆம் தேதி அதாவது இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காலை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

CM Stalin Letter To President: முதலமைச்சர் ஸ்டாலின் செய்த சம்பவம்... குடியரசு தலைவர் முர்மு என்ன செய்யப்போகிறார்? ஆளுநரின் அடுத்த மூவ் என்ன?

SC on Manipur: “நாங்க என்ன செய்ய முடியும்; அது மத்திய மாநில அரசுகளின் பணி” - மணிப்பூர் குறித்து உச்சநீதிமன்றம்

12:14 PM (IST)  •  11 Jul 2023

மேற்குவங்கம் வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு..!

மேற்குவங்கத்தில் டைமண்ட் துறைமுகம் அருகில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தின் முன் நாட்டு வெடி குண்டு வீசப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

12:11 PM (IST)  •  11 Jul 2023

நேபாளத்தில் 6 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் மாயம்

நேபாளத்தில் 6 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் மாயமாகியிருப்பது பெரும் வேதனையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

12:02 PM (IST)  •  11 Jul 2023

பாஜக கூட்டணியில் இணைய அன்புமணி ஜி.கே. வாசனுக்கு அழைப்பு...!

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பாஜக, அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே. வாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

11:59 AM (IST)  •  11 Jul 2023

நேபாளம் - 6 பேருடன் ஹெலிகாப்ட்டர் காணவில்லை

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற விமானத்தை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

11:06 AM (IST)  •  11 Jul 2023

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் காமராஜ் ரூபாய் 127 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 18 ஆயிரம் ஆவணங்களை திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.  

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruma On DMK : ”பஞ்சமி நிலம் மீட்பு என்னாட்சு?” திமுகவுக்கு விசிக CHECK புது ரூட்டில் திருமா!MP Ravikumar slams PM Modi |உ.பி-க்கு 34000 கோடி,நமக்கு வெறும் 7000 கோடியா?மோடியை விளாசும் I.N.D.I.ABengaluru Pigeon Thief | புறாவை வைத்து 30 லட்சத்தை சுருட்டிய திருடன்! பெங்களூரை அலறவிட்ட கேடி!TVK Vijay vs BJP | பாஜகவிடம் பணிந்த விஜய்? ஆயுத பூஜைக்கு வாழ்த்து! காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
Chennai Train Accident:  கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
Chennai Train Accident: கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Train Cancel: கவரப்பேட்டை விபத்து!  18 ரயில்கள் இன்று ரத்து - எந்தெந்த ட்ரெயின்? முழு பட்டியல்
Train Cancel: கவரப்பேட்டை விபத்து! 18 ரயில்கள் இன்று ரத்து - எந்தெந்த ட்ரெயின்? முழு பட்டியல்
Embed widget