மேலும் அறிய

Breaking News LIVE: காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு: காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி

Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE:  காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு: காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி

Background

தமிழ்நாடு:

  • நாடாளுமன்றத்தில் திமுக குரலை கேட்டாலே பாஜக நடுங்குகிறது - தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
  • புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மஞ்சள் நிறம் தீட்டப்பட்ட அரசு பேருந்துகள் - 100 பேருந்துகளின் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் 
  • சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை - கோத்தகிரியில் சாலையில் ராட்சத கற்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  • தன்னாட்சி கல்லூரிகளுக்கான மாதிரி பாடத்திட்டத்தை அந்தந்த கல்லூரி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம் - தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவிப்பு
  • அண்ணா பல்கலைக்கழகத்திற்கு என்.ஏ.ஏ.சி அங்கீகாரம் வழங்கும் விவகாரம் - 8 பேராசிரியர்கள் கொண்ட குழு இன்று ஆய்வு
  • கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நிலத்தை அளவீடு செய்ய வந்த சர்வேயர் மீது தாக்குதல் - அதிமுக முன்னாள் கவுன்சிலர் செருப்பால் அடித்த காட்சி இணையத்தில் வைரல்
  • புதுகோட்டையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தால்  பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி

இந்தியா:

  • மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி - வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் தீர்மானம் தோல்வி என சபாநாயகர் அறிவிப்பு
  • இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க சிலர் முயற்சிப்பதாக திமுகவை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி - நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது முதல் 90 நிமிடங்கள் பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து பேசாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
  • பிரதமர் மோடி சிலப்பதிகாரத்தின் கொள்கைகளை  நடைமுறைப்படுத்தி வருகிறார் - மதுரை எய்ம்ஸ் எப்போது வரும் என்பது தொடர்பான கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா இல்லை கடவுளா? - மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
  • காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் - தொடர் முழுவது பங்கேற்க தடை
  • தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இடமில்லை - புதிய மசோதாவை தாக்கல் செய்த மத்திய அரசு
  • வன்முறையாளர்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் கடிதம்
  • மணிப்பூர் கலவரத்தின் போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மேலும் ஒரு பெண் - குடும்பத்தினருடன் தப்பிய ஓடியபோது அரங்கேறிய கொடூரம் 
  • டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடக்கிறது - தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்

உலகம்:

  • ஈகுவடாரில் அதிபர் வேட்பாளர் கொலை விவகாரம் - நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம்
  • முன்னாள் அதிபர் டிரம்பின் பதிவுகள் வழங்க தாமதம் - டிவிட்டர் நிறுவனத்திற்கு ரூ.2.9 கோடி அபராதம் விதித்த அமெரிக்க நீதிமன்றம்
  • மலேசியாவில் தன்பாலின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் சுவிட்சர்லாந்து நிறுவன தயாரிப்புகளுக்கு தடை
  • ஹவாய் தீவில் பயங்கர காட்டுத் தீ - 36 பேர் பலியான சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்

விளையாட்டு:

  • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியா - ஜப்பான் அணிகள் இன்று மோதல் - மற்றொரு போட்டியில் மலேசியா - தென்கொரியா பலப்பரீட்சை
  • கனடா ஓபன் டென்னிஸ் - இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய போபண்ணா ஜோடி
  • ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

19:58 PM (IST)  •  11 Aug 2023

Breaking News LIVE: காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு: காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

15:19 PM (IST)  •  11 Aug 2023

மணிப்பூர் விவகாரம் நகைப்புக்கு உரியது அல்ல: ராகுல் காந்தி

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘’நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பற்றி பிரதமர் பேசுவார் என்று நினைத்தால் அவர் நகைச்சுவைதான் செய்து கொண்டிருந்தார்.  மணிப்பூர் விவகாரம் நகைப்புக்கு உரியது அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.

15:07 PM (IST)  •  11 Aug 2023

தண்ணீர் திறக்க மறுத்தால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: அமைச்சர் துரைமுருகன்

டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22ஆவது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்துக்குப் பிறகு, கர்நாடகா தண்ணீர் திறக்க மறுத்தால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

15:06 PM (IST)  •  11 Aug 2023

Breaking News LIVE: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது

டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22ஆவது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு சார்பில் நீர்த்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் கலந்துகொண்டுள்ளனர். 

13:59 PM (IST)  •  11 Aug 2023

மக்களை மறுதேதி அறிவிப்பு வரை ஒத்திவைக்கப்பட்டது..

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. ஜூலை மாதம் தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மக்களவை தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் கோஷங்களை எழுப்பி வரும் நிலையில் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. இன்று மக்களவை மறு தேதி அறிவிப்பு வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget