Breaking News LIVE: டம்மி அரசை நடத்திக்கொண்டிருக்கிறது பாஜக - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
- சிதம்பரத்தில் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமரானால் ஜனநாயகம் என்ற ஒன்றே இருக்காது என விமர்சித்துள்ளார். மேலும் இடஒதுக்கீட்டால் சிலர் முன்னேறியதை பாஜகவால் பொறுக்க முடியவில்லை. எரியுதடி மாலா.. ஃபேனை போடு என்ற வடிவேலு வசனத்தை பேசி பாஜகவை கிண்டல் செய்தார். திமுக செய்த நலத்திட்டங்கள் அதிமுகவின் தொகுதிகளையும் வரும் சட்டமன்ற தேர்தலில் பறிக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் பாமக, தமாகா, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதற்காக நேற்று இரவு கேரளாவில் இருந்து ஜே.பி.நட்டா திருச்சிக்கு வருகை தந்தார். காலை சிதம்பரம், கரூர், விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
- ஐபிஎல் போட்டிகளில் இன்று விடுமுறை நாள் என்பதால் 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் மும்பை அணி உள்ளது. இதேபோல் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- உடல்நலக்குறைவால் உயிரிழந்த விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது உடலானது இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
- தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை வெப்ப அலை வீசும் என்பதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருச்சியில் தொடங்கிய நட்டாவின் வாகன பேரணி!
பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வாகன பேரணி திருச்சியில் தொடங்கியது.
டம்மி அரசை நடத்திக்கொண்டிருக்கிறது பாஜக - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களைத் தனது கைப்பாவையாக மாற்றி, அங்கு ஒரு 'டம்மி' அரசை நடத்திக்கொண்டிருக்கிறது பாஜக.
— M.K.Stalin (@mkstalin) April 7, 2024
யாருக்கு எதிராகக் கட்சி தொடங்கினோரோ, அவருக்கே வாக்கு கேட்டு வலம் வரும் அவலத்துக்குத் தள்ளப்பட்டு விட்டார் ரங்கசாமி.
துணைநிலை ஆளுநர்களின் அராஜகத்தால் ரேஷன் கடைகள்… pic.twitter.com/2nLpDm5qAJ
ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை: நயினார் நாகேந்திரன் விளக்கம்
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாட்டிய ரூ.4 கோடி பணத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும், தனக்குச் சொந்தமான இடத்தில் பணம் கைப்பற்றப்படவில்லை எனவும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் இன்னொரு வாக்குறுதியும் சேர்க்கிறேன். கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
As a sports and cricket enthusiast, I would like to add one more promise to our election manifesto for #Elections2024:
— M.K.Stalin (@mkstalin) April 7, 2024
🏏🏟️ We will take efforts to establish a state-of-the-art cricket stadium in Coimbatore, with the active participation of the sports loving people of… https://t.co/B6rpHJKSBI
நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் வீட்டில் ரூ.2 லட்சம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல்!
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் வீட்டில் ரூபாய் இரண்டு லட்சம் மற்றும் பரிசுப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.