மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE: மக்களவைத் தேர்தலுக்காக ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் பொது விடுமுறை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Key Events
Background
- காவிரி மேலாண்மை ஆணையத்தில் 29வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பெங்களூரு நகரத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மற்றும் இதற்கு தீர்வாக கட்டப்பட்டு வரும் மேகதாது அணையின் முக்கியத்துவம் என பல நிகழ்வுகளை எழுப்ப கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 4 மாநில அதிகாரிகளுக்கும், காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார்.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 பள்ளிகளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்குள்ள செம்மங்குள பகுதிகளில் சிறுத்தை சுற்றித்திரியும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தையை பிடிக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. எனவே மக்கள் பயப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றது. அஹமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் 4 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகள் பெற்று தற்போது 8வது இடத்தில் உள்ளது.
- மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு சேகரிக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களும் தபால் வாக்களிப்பார்கள் என்பதால் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்குகள் வீடு, வீடாக சேகரிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை தபால் வாக்குகள் செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20:17 PM (IST) • 04 Apr 2024
மக்களவைத் தேர்தலுக்காக ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் பொது விடுமுறை
மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
18:52 PM (IST) • 04 Apr 2024
ஈரோட்டில் சுட்டெரித்த 106 டிகிரி வெயில் - மக்கள் அவதி
தமிழ்நாட்டில் இன்று ஈரோட்டில் மட்டும் 106 டிகிரி பாரன்ஹூட் வெயில் கொளுத்தியது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.
17:36 PM (IST) • 04 Apr 2024
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது - ப.சிதம்பரம் கேள்வி
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.
15:37 PM (IST) • 04 Apr 2024
அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
14:42 PM (IST) • 04 Apr 2024
சென்னையில் 100 டிகிரி பாரன்ஹூட் சுட்டெரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையில் 100 டிகிரி பாரன்ஹூட் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion