Breaking News LIVE :சென்னை திரிசூலம் மலை அருகே தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அதன் மீது பரிசீலனை நடத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் வாக்குவாதங்கள், குழப்பங்களுக்கு மத்தியில் பல முக்கிய வேட்பாளர்களிடன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. சில நூறு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற்ற வேட்புமனு தாக்கலில், மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதைதொடர்ந்து இன்று தொகுதிவாரியாக இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
இந்நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். சேலம் அக்ரஹாரம் கடை வீதி பகுதியில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அக்ரகாரம் கடை வீதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பஅங்கு இருந்த மக்கள் அனைவரும் முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த டீ கடை ஒன்றில் அவர் அமர்ந்து டீ குடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இது ஒரு பக்கம் இருக்க இந்தியாவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினர் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
சென்னை திரிசூலம் மலை அருகே தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்
சென்னை திரிசூலம் மலை அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதை அணைக்க தீயணைப்புத் துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
சென்னையில் கேளிக்கை விடுதி விபத்து: உரிமையாளர் சரண்
சென்னையில் கேளிக்கை விடுதி விபத்து தொடர்பான வழக்கில் அந்த விடுதி உரிமையாளர் சரண் அடைந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருண்ட கால ஆட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருண்ட கால ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
விதிகளை மீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அண்ணாமலை, தங்கர்பச்சான் மீது வழக்குப்பதிவு
விதிகளை மீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக அண்ணாமலை, தங்கர் பச்சான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ.பி.எஸ்.க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.