Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1993-இல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறிய ஒன்பது மாவட்ட செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்து உண்டதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடந்த திங்கள்கிழமை நடந்த போட்டியின்போது ரசிகர் ஒருவர் போட்டியின்நடுவே களத்திற்குள் நிழந்தார். மைதானத்திற்குள் நுழைந்த அந்த ரசிகர் விராட் கோலியின் கால்களை தொட்டு அவரை கட்டிப்பிடித்தார்.
மைதானத்தில் கோலியை சந்திக்க போடப்பட்ட பாதுகாப்பு வளையத்தை கடந்து சென்றதால், காவலர்கள் ரசிகரை உடனடியான களத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். இப்போது வைரலான வீடியோவில், மைதானத்திற்குள் நுழைந்த ரசிகரை மைதானத்திலேயே பாதுகாப்பு பணியாளர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து, வீடியோ ஒன்று படுவேகமாக வைரலாகி கடும் கண்டத்தையும் பதிவு செய்ய வைக்கிறது.
மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை விமர்சித்துள்ள அக்கட்சி, மிகப்பெரிய சனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருப்பதாக கூறியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இடிந்து விழுந்த மேற்கூரை - ஒருவர் உயிரிழப்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் கேளிக்கை விடுதி கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீடிப்பு..!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்களுக்கு காவல் நீடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
Breaking News LIVE : அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை.. ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு..
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதனால் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.