மேலும் அறிய

Breaking News LIVE: காஞ்சிபுரம் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் அறிவிப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

LIVE

Key Events
Breaking News LIVE: காஞ்சிபுரம் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் அறிவிப்பு

Background

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அளவில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையமும் அத்றகான பணிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது தொடர்பாக பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று வரை சுமார் ரூ. 9.32 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு அரசியல் களம் பொறுத்தவரையில் அனைத்து திமுக, பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை மற்றும் 21 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளாக இன்று திருச்சி சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

திமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர் பட்டியல் அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாஜக தரப்பில் முதல் கட்டமாக 9 தொகுதிகளுக்கான  வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக தரப்பில் இன்று காலை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இப்படி பரபரப்பான சூழலில் இன்றைய நிகழ்வுகளை உடனுக்குடன் விரிவாக பார்க்கலாம். 

இது ஒருபக்கம் இருக்க நாளை 23 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி தரப்பில் ஒரே மேடையில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளரை கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்ய உள்ளார். கடந்த முறை 20 பெண் வேட்பாளர்கள் மற்றும் 20 ஆண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இம்முறையும் அதேபோல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்கள் அறிவிக்க இருக்கும் நிலையில், அரிக்கேன் விளக்கு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே கரும்பு மற்றும் விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தற்போது அரிக்கேன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று இரண்டாவது நாளாக தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு அரசு அனுப்பிய கடிதத்தை நிராகரித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக அது தொடர்பாக வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெறுகிறது. 

இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணி இடையே முதல் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

19:57 PM (IST)  •  22 Mar 2024

காஞ்சிபுரம் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் அறிவிப்பு

காஞ்சிபுரம் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பாமக வேட்பாளர்கள் 10 பேர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

19:20 PM (IST)  •  22 Mar 2024

ஆளுநரை வைத்து பா.ஜ.க. மிரட்டுகிறது - முதலமைச்சர் குற்றச்சாட்டு

ஆளுநரை வைத்து பா.ஜ.க. மிரட்டுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

16:34 PM (IST)  •  22 Mar 2024

திருச்சிக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக திருச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

15:41 PM (IST)  •  22 Mar 2024

அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி - பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றுள்ளார்.

15:31 PM (IST)  •  22 Mar 2024

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம்

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget