Breaking News LIVE:ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ் - தமிழ்நாடு அரசியல் களத்தில் ட்விஸ்ட்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகள் தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
நேற்றைய தினம் திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் முக்கியமாக பெட்ரோட் விலை ரூ. 75 க்கும் டீசல் விலை ரூ.65க்கும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.500க்கும் விற்பனை செய்யப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றது. அதே சமயம் நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதியில் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்ற வேட்பாளர் பட்டியலையும் வெளியிடப்பட்டது. திமுக தரப்பில் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே அதிமுக தரப்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலாக 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அதிமுக தரப்பில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேபோல் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு அதற்கான உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது. விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார்.
இன்று ஓபிஎஸ் தலைமையில் அந்த அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. பாஜக கூட்டணியில் தொகுதிகளை பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.
அதேபோல் பொன்முடியை அமைச்சராக நியமனம் செய்யாத ஆளுநரை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி பரபரப்பான சூழலில் இன்றைய நிகழ்வுகளை உடனுக்குடன் விரிவாக பார்க்கலாம்.
ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும் - காங்கிரஸ்
ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை - தேர்தல் ஆணையம்
வாக்குப்பதிவு அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா! மார்ச் 26ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு விடுமுறை!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநருக்கு நாளை வரை அவகாசம் விதித்த உச்சநீதிமன்றம்
பொன்முடி வழக்கு விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு அதிகாரம் அளித்தது யார்? என்று உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
ஓ.பி.எஸ்.,க்கு ஒரு சீட் வழங்க பாஜக முடிவு; நாளை முடிவை அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்..!
ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு ஒரு சீட் வழங்க பாஜக முடிவெடுத்துள்ளதாகவும், அதுவும் அவர் தாமரைச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் எனவும், பாஜக தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஓபிஎஸ் தனது முடிவை ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி நாளை முடிவினை அறிவிப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.