Breaking Tamil LIVE: காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது தொடர்பாக குழப்பங்கள் நிலவி வந்தது. ஏப்ரல் 19 ஆம் தேதி சுமார் 72 சதவீதம் வாக்கு பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் சுமார் 69.46% வாக்குகள் மட்டுமே பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
மத்திய சென்னையில் 53.91 சதவிகித வாக்குகளும் தென் சென்னையில் 54.24 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது. பொதுவாக திருத்தப்பட்ட வாக்குப்பதிவு விவர அறிக்கையில் சிறிய சிறிய மாற்றங்கள் நிகழலாம். ஒரு சதவிகிதம் 2 சதவிகிதம் என கூட குறையலாம். ஆனால், சென்னையில் உள்ள மக்களவை தொகுதிகளின் வாக்குப்பதிவு விவரங்களில் 8 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை மாற்றம் ஏற்பட்டது பெரும் குழப்பங்களுக்கு வழிவகுத்தது. இதனால், பல சந்தேகங்கள் எழுந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு விவரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 69.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி தேர்தல் களத்தில் இருந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கி மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் மிக முக்கிய நாளான திருக்கல்யாணம் இன்று நடைபெற்று வருகிறது. மதுரையின் அரசி மீனாட்சிக்கும் அவளது நாயகன் சுந்தரேசுவரருக்கும் இன்று காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் மதுரையின் அரசியாக முடி சூடிய மீனாட்சி, நேற்று திக்கு விஜயம் செய்தார். அதனை தொடர்ந்து இன்று திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
கேரளா, கொல்லம் தொகுதியில் பரப்புரை: அண்ணாமலை ரோட்ஷோ
#WATCH | Kerala: Tamil Nadu BJP chief Annamalai held a roadshow as part of the election campaign for BJP Kollam constituency candidate G Krishna Kumar. pic.twitter.com/xZGisLM6MF
— ANI (@ANI) April 21, 2024
Breaking Tamil LIVE: கள்ளழகர் திருவிழாவுக்காக வைகைக்கு வந்தது நீர்..!
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகை ஆற்றுக்கு நீர் வந்தடைந்தது. நாளை மறுநாள் கள்ளழகர், வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக வைகை அணையில் நேற்று 1,000 கன அடி நீர் திறப்பு.
Breaking Tamil LIVE: திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும் - கே.பாலகிருஷ்ணன்
திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும். வாக்குப்பதிவு முடியும் வரை வாக்காளர் பட்டியல் குறித்து எந்த குறையும் பாஜகவினர் கூறவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் - முதலமைச்சர் ஸ்டாலின்
உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;
— M.K.Stalin (@mkstalin) April 21, 2024
தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;
பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;
தற்போது… pic.twitter.com/o0JU8oEaYE
வேலைவாய்ப்பின்மை 42% ஆக இருக்கிறது.. இந்த பிரச்சனை குறைத்து மதிப்பிடப்படுகிறது - ப.சிதம்பரம்
#WATCH | Thiruvananthapuram, Kerala: Congress leader P Chidambaram says, "...The greatest challenge to India is unemployment; some sections underestimate this problem, but this is the greatest problem. In my experience, we never had such a high rate of unemployment...The labour… pic.twitter.com/lTm2Cz2tOF
— ANI (@ANI) April 21, 2024