Breaking News LIVE : மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
மாதத்தின் முதல் நாள் ஏப்ரல் 1ம் தேதி இன்று என்பதால் வணிகரீதியாக பல ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. மகிழ்ச்சியான செய்தியுடன் தொடங்க வேண்டும் என்றால், வணிக சிலிண்டர் விலை ரூ. 30 குறைந்து ரூ. 1930க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து, அப்படியே நம்மை எல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மேலும், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என்று அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 0.00551 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 12 சதவிகிதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவிகிதமும் மருந்துகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி வரும் 9ம் சென்னையில் ரோட் ஷோ மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், மக்களவை தேர்தலை முன்னிட்டு 6வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.
தொடர்ந்து, விளையாட்டு பக்கம் போனால் நேற்றைய போட்டியில் வெளுத்தெடுத்துள்ளார் எம்.எஸ்.தோனி. எப்போது பேட்டிங் வருவார் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு எல்லாத்தையும் சேர்த்து வைத்து மொத்தமாக கொடுத்துள்ளார். டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 16 பந்துகளில் 37 ரன்களை குவித்து கெத்து காட்டியுள்ளார் எம்.எஸ்.தோனி.
இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
"பாஜக அரசின் இந்த சர்வாதிகார போக்குக்கு மக்கள் தகுந்த பதிலை தருவார்கள்” - சுனிதா கெஜ்ரிவால்
தொகுதி மக்களுடன் உரையாடி வாக்கு கேட்கும், ஹிமாச்சல பிரதேச, மண்டி தொகுதி வேட்பாளர் கங்கனா ரனாவத்
VIDEO | Lok Sabha elections 2024: Actor and BJP candidate from Himachal Pradesh's Mandi Kangana Ranaut (@KanganaTeam) interacts with locals in the constituency.#LSPolls2024WithPTI #LokSabhaElections2024
— Press Trust of India (@PTI_News) April 1, 2024
(Full video available on PTI Video - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/QhZmAEJmC3
பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால் அது எனக்கு சொந்தமாகிவிடுமா? அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களின் பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டுமே, 86.82 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணித்துள்ளனர் - மெட்ரோ நிர்வாகம் தகவல்
86.82 lakh passengers recorded to have travelled in March, 2024
— Chennai Metro Rail (@cmrlofficial) April 1, 2024
CMRL has always endeavoured to provide the people of Chennai with a safe, efficient, and reliable travel partner. A total of 86,82,457 passengers have travelled in the Metro Trains from 01.03.2024 to 31.03.2024.… pic.twitter.com/Fgm0eXxjCM