Breaking News LIVE: பாஜக கூட்டணியில் பாமக.. மோடியுடன் இணையும் ராமதாஸ்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வேண்டும் என்பதற்காக போராடி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாஜக கூட்டணியில் அம்முக, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரத்தில் கன்னியகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார் பிரதமர் மோடி. அதேபோல் 6வது முறையாக இன்று தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர், கோவை மாவட்டத்தில் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்துக்கொள்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் 22 ஆம் தேதி அவர் தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 இடங்கள் என்ன என்பது குறித்து இன்று முடிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிமுக தரப்பில் தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பாமக மற்றும் தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவாகும் என கூறப்படுகிறது. இன்று அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், மக்களவை தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ ஆலோசனை இன்று நடத்துகிறார். இத்துடன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார் என்ற பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
அதேபோல், நாம் தமிழர் கட்சி தரப்பில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அந்த சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்த அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து இரட்டை இலை சின்னம், கட்சி பெயர், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் நிரந்தமாக பயன்படுத்த தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. ஏற்கனவே, இறுதி தீர்ப்பு வரும் வரை கட்சி, சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன் என கோர்ட்டில் உத்தரவாதம் அளித்து, அதனை பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து காணலாம்.
பாஜக கூட்டணியில் பாமக.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Breaking News LIVE: ஈரோடு , சேலம் - அதிக வெப்பநிலை பதிவு!
ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இரண்டு மாவட்டங்களிலும் 38.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது என தமிழ்நாடு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 18, 2024
Breaking News LIVE: செந்தில் பாலாஜியில் காவல் நீட்டிப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் ஜுன்=14ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். செந்தில் பாலாஜியின் காவல் மார்ச் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 27-வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ( ஓ.பி.எஸ் ) என்ற பெயரில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனு
மக்களவையில் அதிமுக ( ஓ.பி.எஸ் ) என்ற பெயரில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மக்களவையில் மனுதக்கல் செய்துள்ளது.
Breaking News LIVE: மக்களவை தேர்தலில் தாமரை சின்னத்தில் பாரிவேந்தர் போட்டி
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்று பாரிவேந்தார் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் அதிக நிதிபெற்ற பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதில் எந்த முரண்பாடும் இல்லை என்றும் தெரிவித்தார்.