Breaking News LIVE: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை அமெரிக்கா பயணம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
-
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்றது. இதில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், எங்கள் அணி டி20 உலகக் கோப்பையை ஸ்டைலில் வீட்டிற்கு கொண்டு வருகிறது! இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது” எனத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் #MenInBlue அவர்களின் இரண்டாவது #T20 உலகக் கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதற்காக கொண்டாடுவதில் மகிழ்ச்சி!நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனையுடன் முடித்தது. வாழ்த்துகள், இந்திய அணி” எனத் தெரிவித்துள்ளார்.
- இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றதை கிரிக்கெட் ரசிகர்கள் இரவு முழுவதும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை அமெரிக்கா பயணம்
உலக வங்கியில் ரூபாய் 3 ஆயிரம் கோடி கடன் பெறுவது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.
தேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்கும் அபாயத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - தொண்டர்கள் அபாயம்
மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்குவீதத்தை பெறாததால் தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் அபாயத்தை பகுஜன் சமாஜ்வாதி கட்சி எதிர்கொண்டுள்ளது.
திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
திருவண்ணாமலையில் நெல் கொள்முதலில் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புனே அருகே அருவியில் வெள்ளப்பெருக்கு! 5 பேரில் 2 பேர் சடலமாக மீட்பு!
மகாராஷ்ட்ரா புனே அருகே அருவியில் 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.