Breaking News LIVE, July 30:வயநாடு நிலச்சரிவு: நீலகிரியில் இருந்து மருத்துவர்கள் குழு - அமைச்சர் மா.சுப்ரமணியன்
Breaking News LIVE, July 30: கேரளா நிலச்சரிவு மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள, ஏபிபி செய்தி இணைய செய்திதளத்துடன் இணைந்திருங்கள்.
LIVE
![Breaking News LIVE, July 30:வயநாடு நிலச்சரிவு: நீலகிரியில் இருந்து மருத்துவர்கள் குழு - அமைச்சர் மா.சுப்ரமணியன் Breaking News LIVE, July 30:வயநாடு நிலச்சரிவு: நீலகிரியில் இருந்து மருத்துவர்கள் குழு - அமைச்சர் மா.சுப்ரமணியன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/30/1d606da94f4c2999169790b88c5ec3ab1722303122201732_original.jpg)
Background
- இலங்கை சிறையில் வாடு மீனவர் குடும்பங்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு - சிறைபிடிக்கப்படும் படகுகளுக்கான நிவாரணத்தையும் உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை நெருங்கியதால் விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீர் திறப்பு - அணை நிரம்ப உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
- தூத்துக்குடியில் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது - இழப்பீடு கொடுப்பது எப்படி நியாயம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
- தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை
- கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடும் நிலச்சரிவு - நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிக்கியுள்ளதாக தகவல்
- பிரதமர் மோடி அரசின் சக்கர வியூகத்தில் நாடு சிக்கியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம் - இந்தியா கூட்டணி அதனை தகர்க்கும் என்றும் நம்பிக்கை
- இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்க வாய்ப்பு - மருத்துவ கலந்தாய்வுக் குழு
- டெல்லி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பு
- அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற தெலங்கானாவில் 41 நாள் ஹோமம்
- இங்கிலாந்தில் கத்தி குத்து தாக்குதல் - 2 சிறுவர்கள் பலி, 9 பேர் காயம்
- வெனிசூலா அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ வெற்றி - எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு
- இலங்கையில் நீதித்துறை அமைச்சர் ராஜினாமா - அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு
- இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
- பாரிஸ் ஒலிம்பிக் - வீராங்கனைகளை விமர்சித்த வர்ணனையாளர் நீக்கம்
வயநாடு நிலச்சரிவு - இதுவரை 123 பேர் உயிரிழப்பு
வயநாடு நிலச்சரிவு - இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்
27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!
சென்னை, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி உட்பட 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!
Kerala LandSlide : இந்திய ராணுவத்தின் Madras Regiment-ஐ சேர்ந்த 122 காலாட்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
வயநாடு நிலச்சரிவு: இந்திய ராணுவத்தின் Madras Regiment-ஐ சேர்ந்த 122 காலாட்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக நீலகிரியில் இருந்து 10 மருத்துவர்கள் கொண்ட குழு
"வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக நீலகிரியில் இருந்து 10 மருத்துவர்கள் கொண்ட குழு வயநாட்டிற்கு சென்றுள்ளது. தேவைகளைக் கண்டறிந்து மனிதாபிமான முறையில் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு மக்கள் நல்வாழ்வுத் துறை செயல்படும்!" -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மற்றொரு தமிழரின் உடல் கண்டெடுப்பு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மற்றொரு கல்யாணசுந்தரம் என்னும் தமிழரின் உடல் கண்டெடுப்பு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)