Breaking News LIVE, Aug 12: சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் - தேனி போலீசார் நடவடிக்கை
Breaking News LIVE, Aug 12: சர்வதேச நிகழ்வுகள் தொடர்பான அப்டேட்களை உடனடியாக அறிய, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்

Background
- தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை - சேலத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்த நீர்
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பரவலாக மழை - தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை
- திருவள்ளூரில் ஆர்டர் செய்த உணவில் தோசையை காணவில்லை.. சொமேட்டோவிற்கு ₹15,000 அபராதம் அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்
- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ராமஞ்சேரி பகுதியில் லாரி மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
- பண்டிகைகளை முன்னிட்டு 100மிலி நெய் விலையில் 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாக ஆவின் அறிவித்துள்ளது
- நடப்பாண்டில் இரண்டாவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை - உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு
- அதானி குழுமத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டிற்கு செபி மறுப்பு - அறிக்கையால் இன்று பங்குச்சந்தைகள் சரியும் என முதலீட்டாளர்கள் அச்சம்
- முறைகேடு புகாரில் சிக்கியுள்ள செபி தலைவர் இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்? - ஹிண்டன்பர்க் அறிக்கையை சுட்டிக்காட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராஜினாமா கேள்வி
- கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு - 4 பேரை திருமணம் செய்த குற்றவாளி கைது
- வேளாண் பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் அவசியம் - 109 பயிர் ரகங்களை அறிமுகம் செய்த பிரதமர் மோடி
- வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ஹசீனா கூறவில்லை - வதந்திகள் பரப்பப்படுவதாக மகன் விளக்கம்
- கோலாகலமாக நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் - வீரர்களுக்கான அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திய ஸ்ரீஜேஷ், மனுபாக்கர்
- பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது - சீனா இரண்டாவது இடம்
Breaking News LIVE: சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் - தேனி போலீஸ் நடவடிக்கை
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை கோயமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.
அப்போது சவுக்கு சங்கர் கார் மற்றும் தங்கியிருந்த அறையில் சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரது உதவியாளர் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சவுக்கு சங்கர் மீதும் தேனி மாவட்டம் பழனி செட்டி பட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையில், ஆட்சியர் ஷஜீவனா உத்தரவில் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி தமிழக அரசுக்கு எதிராக பொதுமக்களை போராட தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர ஆணையர் உத்தரவில் பதியப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தால் அண்மையில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரும் 16ஆம் தேதி நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!
சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வரும் 16ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முப்பெரும் விழா தொடர்பாக ஆலோசிக்க இந்த கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெறுகிறது.




















