Breaking News Live : பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 14 பேர் கைது
Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE

Background
பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 14 பேர் கைது
சென்னை திருவல்லிக்கேணியில் முன் விரோதத்தால் ஞானப்பிரகாஷ் என்பவரை, கொலை செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதாவனர்களில் 6 பேர் பள்ளி மாணவர்கள் என தகவல். மேலும் அவர்களிடம் கத்திகள் மற்றும் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம்-ஆட்சியர் உத்தரவு
கோவை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நில அபகரிப்பு தொடர்பான புகாரில் நடவடிக்கை எடுக்காத பதிவுத்துறை ஐ.ஜி-க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
நில அபகரிப்பு தொடர்பான புகாரில் நடவடிக்கை எடுக்காத பதிவுத்துறை ஐ.ஜி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
தாய்- சேய் நல டெண்டருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு அரசின் தாய்- சேய் நல பெட்டக டெண்டருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
"தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு"
மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

