Breaking news live : கேன் குடிநீர்: தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு
Breaking Live 26th Feb 2022 : இந்தியா உள்பட உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
LIVE
Background
உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தோற்கடித்தது. அமெரிக்கா, அல்பேனியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 15 நாடுகள் ஆதரவு அளித்தநிலையில், இந்தியா நடுநிலை வகித்தது.
இந்தியாவை தொடர்ந்து இந்த தீர்மானத்திற்கு சீனா, ஐக்கிய அரபு அமீரகமும் உள்பட பல நாடுகள் நடுநிலை வகித்தனர். ஆனால், 15 நாடுகள் கொண்ட கவுன்சிலின் தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யா நிரந்தர உறுப்பினராக வாக்களித்தது.
கேன் குடிநீர்: தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு
20 லிட்டர் கேன்களில், லேபிள்கள் முறையாக ஒட்டப்பட்டிருக்கவேண்டும். கேன் தண்ணீர், உணவுப் பொருட்களில் குறைபாடு இருந்தால் உடனடியாக உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தகவல் அளிக்கவேண்டும்.
”கருத்துகளின் அடிப்படையில் தீர்மானத்தின் மீது இந்தியா நடுநிலை வகிக்க முடிவு எடுத்துள்ளது” - இந்திய தூதர்
ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் ஐநா தீர்மானம் - ”கருத்துகளின் அடிப்படையில் தீர்மானத்தின் மீது இந்தியா நடுநிலை வகிக்க முடிவு எடுத்துள்ளது” என இந்திய தூதர் தெரிவித்துள்ளார்
3வது நாளாக தொடரும் ரஷ்ய தாக்குதலால் ஒரு லட்சம் உக்ரைன் மக்கள் போலந்தில் தஞ்சம்
3வது நாளாக ரஷ்ய தாக்குதல் தொடரும் நிலையில், ஒரு வாரத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் உக்ரைன் எல்லையை கடந்து போலந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு
உலகக்கோப்பை கால்பந்து தொடரில், ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் ரஷ்யா - போலாந்து அணிகள் மோத இருந்தது. போர் தொடர்பாக, மார்ச் 24-ம் தேதி ரஷ்யாவுக்கு எதிராக நடைபெற இருந்த போட்டியை தவிர்ப்பதாக போலந்து அறிவித்தது.
தெலுங்கானா ஹெலிகாப்டர் விபத்து : தமிழக பெண் விமானி பலி
தெலுங்கானா மாநிலத்தில் பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் விமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவிற்கு பறந்து சென்றது. அப்போது, தல்கொண்டா பகுதிக்கு அருகில் பறந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. இதனால், ஹெலிகாப்டரில் இருந்த தமிழக விமானி உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.