எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்த அமளி... முதல் நாளிலேயே முடங்கியது நாடாளுமன்றம்...!
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியின் ஈடுப்பட்ட நிலையில் நாடாளுமன்றம் முடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி போன்ற பிரச்சினைகளால் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக, மேல்சபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பலர் பதவியேற்றனர்.
அவைத் தலைவர் வெங்கையா நாயுடு சில கருத்துக்களைக் கூறிக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் சபையின் கதவு வரை நடந்து சென்று முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர்.
"சபையை செயல்பட விடக்கூடாது என்பதில் சிலர் உறுதியாக வந்துள்ளதால், குடியரசு தலைவர் தேர்தலில் உறுப்பினர்கள் சென்று வாக்களிக்க முடியும் என்ற காரணத்தினால் நான் அவையை நாள் முழுவதும் ஒத்திவைக்கிறேன்," என்று வெங்கையா நாயுடு கூறினார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, முன்னாள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் முன்னாள் கெனாய அதிபர் மவாய் கிபாகி ஆகியோருக்கும் ராஜ்யசபா மரியாதை செலுத்தியது.
முன்னாள் உறுப்பினர்களான கிஷோர் குமார் மொஹந்தி, ராபர்ட் கர்ஷிங், கே.கே.வீரப்பன் மற்றும் சாந்தூர் வீரர் பண்டிட் ஷிவ்குமார் சர்மா ஆகியோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மக்களவையில், இரங்கல் குறிப்புகள் மற்றும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்புடன் அமர்வு தொடங்கியது, பின்னர் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
#MonsoonSession | முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பு!https://t.co/wupaoCQKa2 | #harbhajansingh #RajyaSabha #Parliment pic.twitter.com/PwWO18zw9F
— ABP Nadu (@abpnadu) July 18, 2022
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் முதன்முறையாக சபை கூடியபோது, மூத்த பாலிவுட் நடிகரும், திரிணாமுல் காங்கிரஸின் சத்ருகன் சின்ஹா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட மூன்று எம்.பி.க்கள் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
சபாநாயகர் ஓம் பிர்லா, அபே உட்பட மூன்று வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் சமீபத்தில் காலமான எட்டு முன்னாள் உறுப்பினர்களின் இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்