மேலும் அறிய

Video : மீன் சாப்பிடும் வீடியோவை பதிவிட்ட தேஜஸ்வி யாதவ்.. பிரச்சனையில் இறங்கும் பாஜக..

தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் மீன் சாப்பிட்ட வீடியோவை பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை போன்று இந்த முறையும் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சர்ச்சை:

உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாள்களே உள்ள நிலையில், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தேர்தல் பரப்புரைக்காக ஹெலிகாப்டரில் செல்லும்போது மீன் சாப்பிட்ட வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சைத்ரா நவராத்திரியின்போது அசைவம் சாப்பிடுவதா என பாஜகவினர், இதை சர்ச்சை ஆக்கியுள்ளனர்.

இந்துக்கள் புனிதமாக கருதும் சைத்ரா நவராத்திரி நேற்று தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு இந்துக்கள் வழிபாடு மேற்கொள்வர். இதை சுட்டிக்காட்டிய இணையவாசிகள் சிலர், இந்துக்களை கோபப்படுத்தும் விதமாக தேஜஸ்வி யாதவ் இப்படி செய்ததாக கடுமையாக சாடியுள்ளனர்.

மீன் சாப்பிட்ட பீகார் முன்னாள் துணை முதலமைச்சர்:

இதற்கு பதிலடி அளித்த தேஜஸ்வி யாதவ், நவராத்திரி தொடங்குவதற்கு முன்பு இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் அளித்த விளக்கத்தில், "பாஜக மற்றும் கோடி மீடியா (மோடியை ஆதரிக்கும் ஊடகம்) ஆதரவாளர்களின் அறிவை பரிசோதிக்க இந்த வீடியோவை நாங்கள் பதிவேற்றினோம்.

நாங்கள் நினைத்தது போலவே நடந்துள்ளது. வீடியோ எப்போது எடுக்கப்பட்டது போன்ற விவரங்களும் பதிவில் உள்ளன. ஆனால், கண்மூடித்தனமாக பின்தொடர்பவர்களுக்கு என்ன தெரியும்?" என குறிப்பிட்டுள்ளார். நேற்று இரவு, தேஜஸ்வி யாதவும் முன்னாள் அமைச்சர் முகேஷ் சாஹ்னியும் ஹெலிகாப்டரில் ஒன்றாக செல்லும்போது உணவு உண்ணும் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

 

பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் மதிய உணவு சாப்பிட 10-15 நிமிடங்கள் மட்டுமே கிடைத்ததை வீடியோவில் தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டிருந்தார். மீன், ரொட்டி உள்ளிட்ட உணவு வகைகளை அவர் சாப்பிடுவது வீடியோவில் பதிவானது.

இந்த விவகாரத்தில் தேஜஸ்வி யாதவை கடுமையாக விமர்சித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், "தேஜஸ்வி யாதவ் ஒரு பருவகால சனாதானி. சமரச அரசியலில் ஈடுபடுபவர். அவரது தந்தை (லாலு யாதவ்) ஆட்சியில் இருந்தபோது, ​​ரோஹிங்கியாக்கள், வங்கதேச ஊடுருவல்காரர்கள் என பலர் இங்கு வந்தனர். சனாதனத்தின் முகமூடியை அணிந்துகொண்டு சமரச அரசியல் செய்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget