மேலும் அறிய

"தமிழ் கலாசாரத்தை சீரழித்துவிட்டனர்" திமுக, காங்கிரஸ் மீது பாஜக தேசிய தலைவர் நட்டா அட்டாக்!

Nadda TN Visit: தமிழ் கலாசாரத்தை திமுக, காங்கிரஸ் சீரழித்துவிட்டதாக விருதுநகர் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா விமர்சித்துள்ளார்

Nadda TN Visit: பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்த மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக:

தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் வென்றுவிட வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

இதற்காக, பாஜக மூத்த தலைவர்கள், தமிழ்நாட்டில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகாவை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ் கலாசாரத்தை திமுக, காங்கிரஸ் சீரழித்துவிட்டதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் மோடி எப்போதும் தமிழ் கலாசாரம், மொழி மற்றும் இலக்கியத்தில் அக்கறை காட்டுகிறார். சர்வதேச அரங்குகளில், தமிழ் கவிஞர்களின் கவிதைகளை வாசித்து மேற்கோள் காட்டுகிறார்.

திமுக, காங்கிரஸை வெளுத்து வாங்கிய நட்டா:

அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டபோது அங்கு செங்கோல் வைக்கப்படுவதை பிரதமர் மோடி உறுதி செய்தார். ஆனால், காங்கிரஸும், திமுகவும் எப்போதும் தமிழ் கலாச்சாரத்தை, சனாதன கலாசாரத்தை களங்கப்படுத்துகிறது.

பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் இந்தியா பல வளர்ச்சிகளை கண்டுள்ளது. ஒரு பெரிய பாய்ச்சல் நடந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போரின் தாக்கம் காரணமாக அனைத்து பொருளாதாரங்களும் சிதைந்துவிட்டன என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அமெரிக்கப் பொருளாதாரம் சிக்கலில் இருந்தது. ஐரோப்பிய பொருளாதாரம் சிக்கலில் இருந்தது. ஜப்பானிய பொருளாதாரம் சிக்கலில் உள்ளது. ஆஸ்திரேலிய பொருளாதாரம் சிக்கலில் இருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் இந்தியா 11 வது இடத்தில் இருந்த நாம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளோம்" என்றார்.

"அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக இருக்கும் இந்தியா"

முன்னதாக, அரியலூரில் பேசிய நட்டா, "எலக்ட்ரானிக்ஸ் துறையில் நமது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், மொபைல் போன்கள் முதன்மையாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

இன்று, மேட் இன் இந்தியா என்று பெயரிடப்பட்ட மொபைல் போன்களைப் பார்க்கிறீர்கள். 97 சதவீத மொபைல்கள் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. நாம், ஜப்பானையும் அமெரிக்காவுடன் இணைந்து ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றினோம்.

ஆனால் இன்று, பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியுள்ளது. மருந்துத் துறையில், இந்தியா மிகவும் பயனுள்ள உற்பத்தியாளராக மாறியுள்ளது.

மலிவான மருந்தை உற்பத்தி செய்கிறது. எனவே, இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது, நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக நீங்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கும் போது, ​​இந்தியா இன்னும் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Embed widget