மேலும் அறிய

BJP Strategy : சூடுபிடித்த தேர்தல் களம்..மத்திய அமைச்சர்களை களத்தில் இறக்கிய பாஜக..பக்கா பிளானாம்

தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள பாஜக, எந்த மாநிலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து வியூகம் அமைத்து வருகிறது.

அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. 

சூடு பிடித்த தேர்தல் களம்:

குறிப்பாக, தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள பாஜக, எந்த மாநிலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து வியூகம் அமைத்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் நடைபெற உள்ள நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது பாஜக. தேர்தல் நடைபெற உள்ள நான்கு மாநிலங்களில் ஒன்றில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது.

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. சத்தீஸ்கரிலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தெலங்கானாவை பொறுத்தவரையில், மாநிலம் உருவான 2014ஆம் ஆண்டிலிருந்தே பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

பக்காவாக பிளான் போடும் பாஜக:

அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை பாஜக நியமித்துள்ளது. இணை பொறுப்பாளர்களாக குஜராத் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் நிதின் படேல் மற்றும் குல்தீப் விஷ்யா நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் கோட்டைகளில் ஒன்றாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் இரண்டு மத்திய அமைச்சர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பொறுப்பாளர்களாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர், சத்தீஸ்கர் மாநில தேர்தல் பொறுப்பாளராகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் தேசிய பொதுச் செயலாளர் சுனில் பன்சால் இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு மாநிலங்களை தவிர்த்து, மிசோரமிலும் இந்தாண்டின் இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது.

முன்னதாக. மொத்தமுள்ள 543 தொகுதிகளையும் தேர்தல் வசதிக்காக மூன்று மண்டலங்களாக பாஜக பிரித்தது. வடக்கு, தெற்கு, கிழக்கு என மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதற்க தனித்தனியே ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மும்பை, கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் தென் மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆலோசனை கூட்டங்களில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் அப்பகுதி அமைச்சர்களுடன் அந்த பகுதியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. மேலும், அந்தந்த மாநிலங்களின் பொறுப்பாளர்கள், மாநில தலைவர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
Embed widget