மேலும் அறிய

லஞ்சம் கேட்ட மருத்துவமனை...மகனுக்காக பிச்சை எடுத்த பெற்றோர்...மனதை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..

இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெற்ற குழந்தைகளுக்காக பெற்றோர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. குறிப்பாக, குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றால் சொல்லவே வேண்டாம். இம்மாதிரியான ஒரு சம்பவம்தான் பிகாரில் நடைபெற்றுள்ளது. மருத்துவமனையில் உள்ள மகனின் உடலை பெறுவதற்காக பெற்றோர் பிச்சை எடுத்த சம்பவம் மனதையே பதற வைத்துள்ளது. 

பிகார் சமஸ்திபூரில் வயதான பெற்றோர் அரசு மருத்துவமனையில் இறந்த தனது மகனின் உடலை பெறுவதற்காக தெருவில் இறங்கி பிச்சை எடுத்துள்ளனர். மகனின் உடலை கொடுக்க வேண்டும் எனில், 50,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என மருத்துவமனையில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். தங்களிடம் பணம் இல்லாததால், அவர்கள் தெருவில் இறங்கி பிச்சை எடுத்துள்ளனர். இதுபற்றிய விடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மனதை பதற வைத்துள்ளது.

சில நாள்களுக்கு முன்பு,  தனது மகன் காணாமல் போனதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "சில நாள்களுக்கு முன்பு, எனது மகன் காணாமல் போனார். தற்போது, எனது மகனின் உடல் சமஸ்திபூரில் உள்ள சாதார் மருத்துவமனையில் இருப்பதாக எனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. ஆனால், மகனின் உடலை தர வேண்டும் என்றால் 50,000 ரூபாய் தர வேண்டும் என மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர் ஒரு தெரிவித்தார். நாங்கள் ஏழைகள், எங்களால் எப்படி இந்த பணத்தை தர முடியும்" என்றார்.

மருத்துவமனையில் பணிபுரியும் பெரும்பாலான பணியாளர்கள் ஒப்பந்தத்தில் வேலை செய்துவருகிறார்கள். அவர்களுக்கு, சரியான நேரத்தில் ஊதியம் கிடைக்காது. இச்சூழலில், பலமுறை அவர்கள் நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் கேட்பது தொடர்கதையான சம்பவம். இந்நிலையில், இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மருத்துவர் செளத்ரி கூறுகையில், "இதற்கு காரணமானவர்களை விட மாட்டோம். மனித நேயத்தின் வெட்கக்கேடான சம்பவம் இது" என்றார். 

ஊழல் என்பது இந்தியாவின் அனைத்து மட்டங்களிலும் பரவியுள்ள நிலையில், அதை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுத்துதான் ஆக வேண்டும். ஆனால், ஒப்பந்த பணியாளர்களின் சூழலை புரிந்து இதற்கு சரியான தீர்வு எடுப்பதே நீதியை நிலைநாட்டும் செயலாகும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Adulteration in Watermelon: தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..
தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Adulteration in Watermelon: தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..
தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Fact Check: மெட்ரோ ரயில் விளம்பரம் -  மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
மெட்ரோ ரயில் விளம்பரம் - மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
Embed widget