SC oN Baba Ramdev: ”நாங்க ஒன்னும் குருடு இல்லை” - பாபா ராம்தேவின் மன்னிப்பை நிராகரித்த உச்சநீதிமன்றம்
SC oN Baba Ramdev: ராம்தேவ் தனது மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தில் மோசடி செய்ததாக, உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.
SC oN Baba Ramdev: பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க, உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ராம்தேவின் மன்னிப்பை நிராகரித்த உச்சநிதிமன்றம்:
நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில், பதஞ்சலி நிறுவனர்கள் ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோர் மன்னிப்பு கோரி பிரமாணபத்திரம் தாக்கல் செய்தனர். ஆனால், அதில் திருப்தி இல்லை என நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. நாங்கள் குருடர்கள் அல்ல, இந்த வழக்கில் தாராளமாக இருக்க விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மன்னிப்பு என்பது காகிதத்தில் மட்டுமே உள்ளது. இதை நாங்கள் ஏற்க மறுக்கிறோம், இது வேண்டுமென்றே உறுதிமொழி மீறலாக நாங்கள் கருதுகிறோம். நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்பு பிரமாணப் பத்திரங்கள் பொதுவெளியில் வெளியிட்டதற்கு ஆட்சேபனையும் தெரிவித்தனர்.
Supreme Court pulls up Uttarakhand government for not taking action against Patanjali Ayurved for violation of law.
— ANI (@ANI) April 10, 2024
Supreme Court tells Uttarakhand government that it is not going to let it free. All complaints were forwarded to the government. The licensing inspector remained…
பப்ளிசிட்டிக்காகவா?..
நேற்று மாலை 7.30 மணி வரையில் அந்த பிரமாணபத்திரம் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. ஆனால், அதற்கு முன்னதாகவே அவை ஊடகங்களுக்கு சென்றன. பப்ளிசிட்டிக்காகவே அவர்கள் இந்த மன்னிப்பை கோரியுள்ளனர் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பிரமாணப் பத்திரத்தில் மோசடி செய்கிறீர்கள். அதை யார் தயாரித்தது என்பதில் ஆச்சரியமாக இருக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தர். அது ஒரு சிறிய தவறு என பதஞ்சலி தரப்பு கூற, அது ”மிகச் சிறிய வார்த்தை” என நிதிபதிகள் சாடினர். மேலும், “ விளம்பரங்களை திரும்பப் பெறுங்கள் என மாநில அரசு வலியுறுத்திய போது, உங்களது பதில்களை பாருங்கள். எங்களுக்கு எதிராக எந்த வற்புறுத்தல் நடவடிக்கையும் இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக பதிலளித்துள்ளீர்கள். இது உங்களது நடத்தையாக எங்களால் கருதப்படுகிறது” என வும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உத்தராகண்ட் அரசுக்கு கண்டனம்:
ஆயுர்வேத மருந்துகளை உலகில் முதன்முதலில் கொண்டு வந்தவர்கள் என்பது போல் மக்களை ஆயுர்வேத மருந்துகளுடன் இணைப்பதே விளம்பரத்தின் நோக்கம் என்று அவர்கள் கூறுகிறார்கள். உச்சநீதிமன்றம் இப்போது கேலிக்கூத்தாக மாறிவிட்டது என நீதிபதிகள் ஆவேசமாக பேசினர். சட்டத்தை மீறியதற்காக பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, உத்தரகாண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பதிலில் திருப்தி இல்லை என்றும் தெரிவித்தனர். உத்தராகண்ட் மாநிலத்தை விடுவிக்க போவதில்லை. என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து புகார்களும் அரசுக்கு அனுப்பப்பட்டன. உரிமம் வழங்கும் ஆய்வாளர் அமைதியாக இருந்தார், அதிகாரிகளின் உரிய அறிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.