பாம்புக்கு இரக்கம் காட்டிய மக்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
பாம்புக்கு இரக்கம் காட்டிய மக்கள் இணையவாசிகளை நெகிழச் செய்துள்ளது. பாம்பென்றால் படையும் நடுங்கும். ஆனால் இந்த பாம்பை காப்பாற்ற மக்கள் படைபோல் சிறு கூட்டமாக திரண்டு அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
பாம்புக்கு இரக்கம் காட்டிய மக்கள் இணையவாசிகளை நெகிழச் செய்துள்ளது. பாம்பென்றால் படையும் நடுங்கும். ஆனால் இந்த பாம்பை காப்பாற்ற மக்கள் படைபோல் சிறு கூட்டமாக திரண்டு அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். அதுவும் கொடிய விஷப்பாம்பு என்று அறிந்தும் மக்கள் அதை அப்படியே விட்டுவிட்டுச் செல்லாமல் காப்பாற்றியுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள நால்கோ சக்கா பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவு வேளையில் நடு ரோட்டில் அடிபட்ட நிலையில் பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டது அதனைப்பார்த்த உள்ளூர்வாசிகள். அந்த பாம்பைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி நின்றனர். அவர்கள் ஸ்நேக் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துவிட்டு நின்றிருந்தனர். அப்போது மணி அதிகாலை 2.30 மணியை நெருங்கிவிட்டது. இருந்தும் அந்த உள்ளூர்வாசிகள் பொறுமையாக பாம்புக்கு பாதுகாப்பாக நின்றிருந்தனர். ஏனெனில் அவர்கள் அதை விட்டுவிட்டுச் சென்றால் வழியில் வரும் வாகனங்கள் ஏறி அந்தப் பாம்பு இறந்துபோகக் கூடும். பின்னர் ஒருவழியாக மீட்புக்குழு வந்து பாம்பை மீட்டுச் சென்றது.
Bbsr, 2:30 AM. Nalco chhaka. Middle of the road. An injured and stranded cobra, unable to slither. Humans showed up, formed a circle, stood guard, diverted vehicles, alerted the snake helpline, some muttered apologies to lord shiva, for his child suffered as they looked on. pic.twitter.com/iAZIvM8hvs
— Akash Baghar (@akashbaghar) March 15, 2023
இது குறித்து இணையவாசி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவைப் பகிர்ந்து இவ்வாறு எழுதியுள்ளார். அதில், அமைதியற்ற, நிலையற்ற, ஒற்றுமையற்ற, வெறுப்பு மிகுந்த உலகில் எல்லாமே கெட்டதாகவும் இல்லை. இதுபோன்ற சம்பவம் மனிதம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்ற ஆறுதலைத் தருகிறது. பாம்புக்கு துணையாக நின்ற மனிதர்கள் இந்த மனிதத்திற்கு சாட்சி என்று பதிவிட்டுள்ளார்.
பாம்புகள் விவசாயிகளின் நண்பன் மேலும் பாம்பு தன்னை தற்காத்து கொள்ளவே கடிக்க முற்படும் அவற்றை பாதுகாப்பாக அப்புறபடுத்த வேண்டும். நமது உணவு சங்கிலியின் ஓர் அங்கம் அவற்றை பாதுகாக்க வேண்டுமே தவிர அழிக்ககூடாது என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். பாம்புகளின் விஷைத்தன்மை நம்மால் கணிக்க முடியாது அகவே பயிற்சி இன்றியோ விளையாட்டாகவோ பாம்புகளை பிடிக்க ஒருபோது முயற்ச்சிக்க கூடாது எனவும் அறிவுத்துகின்றனர். பாம்பு மீட்பர்கள் பற்றி சர்ச்சையான கருத்துகளும் நிலவுகின்றன என்பது வேறு தனிக்கதை.