”மொத்தம் 120” : கேரளாவில் தரையிறக்கப்பட்ட இலங்கை விமானங்கள்!
தரையிறக்கத்தை அனுமதிப்பதன் மூலம் விமான நிலையங்கள் தங்கள் கடமைக்கு அப்பால் சென்றுவிட்டன
இலங்கையில் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு நிலவி வந்ததை அடுத்து தனது அரசாங்கத்திற்கு எதிராக பல மாதங்களாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே அண்மையில் மக்கள் பெருந்திரளாக அங்கே அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்குக் கப்பலில் தப்பி ஓடினார்.
அவர் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மஹிந்த ராஜபக்சே தப்பியோடிய பிறகு இலங்கை பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சி அறிவுறுத்தலின்படி பதவி விலகி உள்ளார். அவரது வீட்டுக்குப் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். கடந்த 13 ஜூலை அன்று கோத்தபய அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என சபாநாயகர் அறிவித்தார்.இதற்கிடையே இலங்கையில் அவசரநிலை பிரகடனத்தில் உள்ளது. இலங்கையில் சூழல் தற்போது சென்ஸிட்டிவ்வாக இருப்பதாகவும் அதனால் அண்டை நாட்டின் உதவி தேவைப்படும் இந்த நேரத்தில் அந்தத் தீவு நாட்டுக்கு உதவுவதற்கான வழிவகைகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் இந்தியா கூறியுள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையத்தை நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவ முன்வந்ததற்காக பாராட்டினார்.இலங்கைக்குச் செல்லும் 120க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு கேரள விமான நிலையங்களில் தற்காலிகமாகத் தரையிரங்க அந்த மாநிலம் வழிவகை செய்ததே இதற்குக் காரணம்.
இதுகுறித்து, ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டரில் "இலங்கைக்கு செல்லும் 120க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு தொழில்நுட்ப ரீதியான காரணங்களுக்காகத் தரையிறக்கத்தை அனுமதிப்பதன் மூலம் விமான நிலையங்கள் தங்கள் கடமைக்கு அப்பால் சென்றுவிட்டன. இந்த சைகை நமது அண்டை நாடுகளுடனான உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் நீண்ட தூரம் செல்லும்" என்று கூறியுள்ளார்.
Kudos Trivandrum & Kochi airports for demonstrating the Indian spirit of वसुधैव कुटुम्बकम्!
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) July 13, 2022
The airports have gone beyond their call of duty by allowing technical landing to 120+ aircraft bound for Sri Lanka. The gesture will go a long way in furthering ties with our neighbour.
இலங்கையில் பிப்ரவரி மாதம் முதல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தினசரி பல மணிநேர மின்வெட்டு ஏற்பட்டது. தற்போது, இலங்கை கடுமையான உணவு மற்றும் மின்சார தட்டுப்பாட்டுடன் போராடி வருவதால், அண்டை நாடுகளின் உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.