மேலும் அறிய

லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?

பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சமீபகாலமாக இதுபோன்ற லட்சக்கணக்கில் சம்பளம் பெறுபவர்களில் சிலர் தங்களது தேவையை பூர்த்தி செய்ய அந்த பணம் போதவில்லை என கூறி பார்ட் டைம் வேலைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஐடி ஊழியர் லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றும், வார இறுதியில் ரேபிடோ டாக்ஸி ஓட்டும் சம்பவம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற ஆதங்கம் இன்றைய காலத்தில் பல துறைகளிலும் பணியாற்றுபவர்கள் இடையே உள்ளது. இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு செய்வது, தனியாக சொந்தமாக பிசினஸ் கவனிப்பது என பல விஷயங்களில் நாம் நாட்டம் செலுத்தி வருவதை பார்த்திருக்கலாம். நம்மை சுற்றியிருக்கும் அனைத்தின் விலையும் உயர்ந்து விட்டது. ஆனால் சம்பளம் மட்டும் அப்படியே இருப்பதாக பலரும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

அதாவது எக்ஸ் வலைத்தளத்தில் ஷபாஸ் என்ற நபர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சர்வதேச கம்பெனி ஒன்றில் ஐடி ஊழியராக பணியாற்றும் 35 வயது நபரை சந்தித்தேன். பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டாவிற்குப் பயணம் செய்தபோது ராபிடோ முன்பதிவு செய்தேன். அந்த நபர் தான் பைக் டாக்ஸி ஓட்டுநராக வருகை தந்தார். நாங்கள் பயணத்தை தொடங்கியபோது அவர் என்னிடம் கன்னடத்தில் பேச தொடங்கினார். 

ஆனால் நான் சரியாக கன்னடம் பேசவில்லை என்பதால் ஆங்கிலத்தில் உரையாட தொடங்கினார். நான் என்ன வேலை செய்கிறேன் என்று அவர் கேட்க, நான் ஐடி துறையில் பணியாற்றுவதாக சொன்னேன். தானும் அதே துறையில் ஊழியர் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது கம்பெனி பெயரை சொல்லி, லட்சத்தில் சம்பளம் பெறுவதாகவும் கூறினார். அந்த பைக் டாக்ஸி ஓட்டுநருக்கு திருமணமாகி ஒரு கைக்குழந்தை உள்ளது. இதில் கிடைக்கும் வருமானம் தனது குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்ற பயன்படுவதாக அவர் கூறினார். 

பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சமீபகாலமாக இதுபோன்ற லட்சக்கணக்கில் சம்பளம் பெறுபவர்களில் சிலர் தங்களது தேவையை பூர்த்தி செய்ய அந்த பணம் போதவில்லை என கூறி பார்ட் டைம் வேலைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளதை இந்த சம்பவம் காட்டுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உண்மையிலேயே என்னைச் சிந்திக்க வைத்தது. ஒரு நல்ல ஐடி வேலையும், ஆறு இலக்கச் சம்பளமும் வாங்கும் ஒருவருக்கே வார இறுதி நாட்களில் ஒரு பகுதி நேர வேலை தேவை என்று தோன்றினால், பெங்களூரு மற்றும் பிற முதல் நிலை நகரங்களில் வாழ்க்கை எவ்வளவு விலை உயர்ந்ததாகிவிட்டதா? என அந்த நபர் கேள்வியெழுப்பியுள்ளார். 

Also Read: Viral Video: நடுரோட்டில் துண்டுடன் ஆடிய இந்தியப் பெண்.. வியட்நாமில் பறிபோன மானம்.. டென்ஷனாகும் நெட்டிசன்கள்!

இது சமூக கலாச்சாரம் மற்றும் வேலை - வாழ்க்கை சமநிலை குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது. அதேசமயம் சிலர் சமூகத்தில் மனநிறைவு, மகிழ்ச்சி ஏற்பட்ட மக்களுடன் பழகுவதற்காகவும் இத்தகைய பார்ட் டைம் பணிகளில் ஈடுபடுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget