Bengaluru Power Cut: உஷார் மக்களே! 4 நாளுக்கு பெங்களூர்ல கரண்ட்டே கிடையாது! காரணம் என்ன?
Bengaluru Power Cut (23.11.2025): பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM) நாளை நவம்பர் 23 ஆம் தேதி வரை பல இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக 10 மணி நேரம் மின் தடை செய்யவுள்ளது

பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 23 ஆம் தேதி பெங்களூருவின் பல பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது
பெங்களூரு மின் தடை:
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 23 ஆம் தேதி வரை பெங்களூருவின் பல பகுதிகளில் மின் தடை ஏற்படும்.கேபிடிசிஎல் சோலதேவனஹள்ளி துணை மின் நிலையத்தில் அவசர பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்வெட்டு அமலில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM), நவம்பர் 23 ஆம் தேதி வரை மின்வெட்டு இருக்கும் என அறிவித்தது. இந்த நேரத்தில் மக்கள் ஒத்துழைக்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின் தடை ஏற்படும் போது இடைப்பட்ட மின்சார விநியோகத்தை அனுபவிப்பார்கள்.
காலை 10.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை:
இந்த மின்வெட்டு 10 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் எனவும், இருப்பினும், ஒவ்வொரு பகுதியிலும் பணிகள் முடிவடைதை பொறுத்து நேரங்கள் மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பெஸ்காம் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள்:
தாராபனஹள்ளி, ஹுருளிச்சிக்கனஹள்ளி, டிபி கிராஸ், ஹெர்சங்கட்டா, பிலிஜாஜி, துவாரகாநகர், சிக்கபானவரா, மாருதி நகர், கணபதி நகர், சாந்திநகர், பிரதர்ஸ் காலனி, கிருஷ்ணா காலேஜ் சாலை, ராகவேந்திரா லேஅவுட், சசுவேகட்டா, பஜஜப்பா ஸ்வாமிஜிஹள்ளி, சிவகுமார் தாஸ்வாமிஜியா லேஅவுட், தோட்டகெரே பசவண்ணா கோயில், ஹோசஹள்ளி பாளையம், சிடிபிஓ, டேனிஷ் பண்ணை, கேஎம்எஃப், கால்நடை பராமரிப்பு, குனி அக்ரஹார், சோமேஷீதிஹள்ளி, கனிகரஹள்ளி, பைப்லைன் சாலை, கெரேகுடஹள்ளி.
ஹுருளிச்சிக்கனஹள்ளி (விரிவாக்கப்பட்ட பகுதிகள்), கேடி பூர், ஐஐஎச்ஆர், ஐவரகொண்டாபூர், சீகேம்பனஹள்ளி, லிங்கனஹள்ளி, மடப்பனஹள்ளி, காலேனஹள்ளி சிவகோட் கிராமம், மாவல்லிபுரா, கொண்டஷெட்டிஹள்ளி, குருபரஹள்ளி, குருபரஹள்ளி பகேகவுடன்பாலையா, டி மாவல்லிபுரா, ராபர்கவுதன்பாலியா, ராபர்கவுடன்பாளைய சாலை, ஆகிய இடங்களிலும் மின்சாரம் பாதிக்கப்படும். அச்யுத் நகர், சோலதேவனஹள்ளி மற்றும் அருகிலுள்ள பகுதிகள்.






















