Bengaluru Power Shutdown: வீக் எண்ட்டிலும் 6 மணி நேர மின் தடை! பெங்களூரு மக்களே அலர்ட்! முழு விவரம்
Bengaluru Power Cut: பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM) பராமரிப்பு பணிகள் காரணமாக நகரின் முக்கிய இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் 6 மணி நேரம் மின் தடை செய்யப்டும்

பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக வார இறுதி நாட்களில் முக்கிய இடங்களில் மின் தடை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு நேரம் மின்வெட்டு?
பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளும் இடங்களிள் மின் தடையானது காலை 10 மணி முதல் மாலை 04 மணி வரை மின் தடை இருக்கும் என்றும் பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிவடைந்தால் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.
எந்த பகுதியில் மின் தடை?
தெற்கு பெங்களூரு: பொம்மனஹள்ளி, எச்எஸ்ஆர் லேஅவுட், குட்லு, ஜக்கசந்திரா, பெல்லந்தூர் மற்றும் சர்ஜாபூர் சாலையில் நீண்டுள்ளது
கிழக்கு பெங்களூரு:மராத்தஹள்ளி, ஒயிட்ஃபீல்ட், கேஆர் புரம், மகாதேவபுரா, பானஸ்வாடி மற்றும் ஹோரமாவு
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.






















