Bengaluru Power Cut: பெங்களூருவில் நாளை(24-11-25) மின் தடை! உங்கள் பகுதியில் மின்வெட்டு இருக்குமா? BESCOM அறிவிப்பு!
Bengaluru Power Cut (24.11.2025): பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM) நாளை நவம்பர் 24 ஆம் தேதி பல இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக 3 மணி நேரம் மின் தடையை செய்யவுள்ளது

பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 24 ஆம் தேதி பெங்களூருவின் பல பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது
பெங்களூரு மின் தடை:
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 24 ஆம் தேதி பெங்களூருவின் கே.வி. வித்யா துணை மின்நிலையத்தில் கே.பி.டி.சி.எல்.-இன் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 09:00 மணி முதல் மாலை 12:00 மணி வரை மின்வெட்டு அமலில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM), நவம்பர் 24 ஆம் தேதி மின்வெட்டு ஏற்ப்படும் என அறிவித்தது. இந்த நேரத்தில் மக்கள் ஒத்துழைக்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின் தடை ஏற்படும் போது இடைப்பட்ட மின்சார விநியோகத்தை அனுபவிப்பார்கள்.
எவ்வளவு நேரம் மின்வெட்டு?
இந்த மின்வெட்டு 3 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் எனவும், இருப்பினும், ஒவ்வொரு பகுதியிலும் பணிகள் முடிவடைதை பொறுத்து நேரங்கள் மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பெஸ்காம் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள்:
விகாஸ் நகர் 8வது மைல் சாலை, ஹவனூர் எக்ஸ்டென்ஷன், வித்யா பள்ளி வித்யா பஸ் ஸ்டாப், முனிகொண்டப்பா லேஅவுட், வித்யா நகர், மஞ்சுநாத் நகர், கட்டராய நகர், விஜயலட்சுமி லேஅவுட் பி.டி.எஸ் லேஅவுட், சசுவெட்டா, தாரபனஹள்ளி மெயின் ரோடு, விஸ்வேஸ்வரய்யா லேஅவுட் பைரவேஸ்வரா சர்க்கிள், விநாயக் நகர், ஷோபா அபார்ட்மென்ட், ராமையா லேஅவுட், நாராயண லேஅவுட், குவேம்பு நகர், ரிலையன்ஸ் ஃப்ரெஷ், அசோகா நகர், டிஃபென்ஸ் காலனி, மகாலட்சுமி நகர், சோப் ஃபேக்டரி லேஅவுட் அந்தனப்பா லேஅவுட் சித்தேஸ்வரா லேஅவுட், சோல்டேனஹள்ளி, ஹெசரகட்டா மெயின் ரோடு, ராயல் என்கிளேவ் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு இருக்கும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.
66/11 kV அப்பிகெரே துணை மின்நிலையத்தின் கீழ் உள்ள கூடுதல் மண்டலங்கள்: கம்மகொண்டனஹள்ளி, ராகவேந்திர படவனே, லட்சுமிபூர், வதேரஹள்ளி, அப்பிகெரே தொழில்துறை பகுதி, பைப்லைன் சாலை, நிசர்கா படவனே, கெம்பேகவுடா படவனே, கலாநகர் பிரதான சாலை.
220/66/11 கேவி பீன்யா துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள மண்டலங்கள்: பீன்யா 10வது & 11வது பிரதான சாலைகள், உடுப்பி ஹோட்டல் பகுதி, ஐஆர் பாலிடெக்னிக் சாலை, லக்கரே கிராமம், லவ்குஷ் நகர், ராகவேந்திரா நகர், சௌடேஸ்வரி நகர் 6வது-9வது குறுக்கு ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படும்























