Watch Video: அச்சச்சோ! பரபரப்பான பாலத்தில் பைக், காரை மோதி தள்ளிய பேருந்து - பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்
பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேம்பாலத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களை இடித்து தள்ளி பேருந்து ஒன்று சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் பெங்களூர். நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று பெங்களூர் ஆகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்களும் பணிபுரியும் நகரமாக பெங்களூர் உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
பைக், கார்களை இடித்து தள்ளிய பேருந்து:
பெங்களூர் விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகள் மிகுந்த போக்குவரத்து நெரிசலாக காணப்படும். பெங்களூர் விமான நிலையத்திறண்கு செல்லும் பாதையில் ஹெப்பால் மேம்பாலம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இன்று இந்த மேம்பாலத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
VIDEO | #Karnataka: A bus driver lost control of the vehicle and crashed into several vehicles in #Bengaluru. One person was seriously injured in the accident which was caught on CCTV of the bus.
— Press Trust of India (@PTI_News) August 13, 2024
(Source: Third Party) pic.twitter.com/G98feErmTu
அப்போது, மேம்பாலத்தின் மேலே பேருந்து ஓட்டுனர் மித வேகத்தில் பேருந்தை இயக்கி வந்தார். ஆனால், திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பேருந்தின் முன்னால் சென்ற இரு சக்கர வாகனங்களை எல்லாம் இடித்து தள்ளவிட்டு பேருந்து முன்னோக்கிச் சென்றது. பேருந்தை நிறுத்த ஓட்டுனர் முயற்சித்தும் பேருந்தை நிறுத்த இயலவில்லை.
பெரும் பரபரப்பு:
அப்போது, முன்னால் சென்ற கார் ஒன்றின் மீது பேருந்து இடித்தது. அப்போது, அந்த கார் பேருந்தின் முன்பு குறுக்கே நின்றது. இதனால், காரின் மீது இடித்து பேருந்து நின்றது. பரபரப்பான சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தால் அங்கு பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால், இரு சக்கர வாகனத்தில் சென்ற பலருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.