"என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" பிஸ்கட் வழங்கி கொண்டாடிய புருஷன்
பெங்களூரில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது மனைவி அவரது தாய் வீட்டிற்குச் சென்றதை முன்னிட்டு பயணிகளுக்கு பிஸ்கட்டை வழங்கி கொண்டாடியுள்ளார்.

மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்தில் ஜனகராஜ் என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்ற ஒரு நகைச்சுவை இடம்பெற்றிருக்கும்.
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா:
அதில், தனது மனைவி ஊருக்கு போய்விட்டதை ஜனகராஜ் கத்தி ஆர்ப்பரித்து என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று கொண்டாடுவார். இன்றும் இன்ஸ்டாகிராமில் நகைச்சுவையாக இந்த வீடியோவை பலரும் நடித்துக் காட்டுவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில், இப்படி ஒரு சம்பவம் உண்மையிலே நிகழ்ந்துள்ளது.
பெங்களூரில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏறும் பயணிகளுக்கு மில்க் பிகிஸ் பிஸ்கட் பாக்கெட்டை இலவசமாக வழங்குகிறார். அந்த பிஸ்கெட் பாக்கெட் அருகில் தனது மனைவி அவரது தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அதனால், நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று எழுதிய வாசகம் உள்ளது.
View this post on Instagram
பயணிகள் அதிர்ச்சி:
இதைப்பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில பயணிகள் இதைக் கண்டு சிரிப்பதா? வேதனை அடைவதா? என்று குழப்பம் அடைந்துள்ளனர். இதை பயணி ஒருவர் புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கணவன் மனைவி இடையே மோதல், சண்டை, சச்சரவுகள் என எது இருந்தாலும், இதுபோன்று மனைவி அவரது சொந்த வீட்டிற்குச் சென்றதை கொண்டாடும் போக்கு தவறானது என்றே நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

