மேலும் அறிய

கட்டுப்பாட்டை இழந்த SUV... பெங்களூருவில் நிகழந்த பயங்கரம்.. 7 உயிர்கள் பறிபோன சோகம்

ஹோஸ்கோட் தாலுகாவில் உள்ள கம்பலிபுரா கேட் அருகே அதிகாலை 4:15 மணி முதல் 4:30 மணி வரை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பெங்களூ வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் ஆறு மாணவர்கள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹோஸ்கோட் தாலுகாவிற்கு உட்பட்ட கம்பலிபுரா கேட் அருகே அதிகாலை 4:15 மணி முதல் 4:30 மணிக்குள் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து எப்படி நடந்தது?

ஹோஸ்கோட்டிலிருந்து தேவனஹள்ளி நோக்கிச் சென்ற எக்ஸ்யூவி 700 (SUV 700) ரக காரை 17 வயது சிறுவன் அயன் ஓட்டிச் சென்றுள்ளார். மணிக்கு 100 கிமீ வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட அந்தச் சாலையில், சுமார் 150 முதல் 160 கிமீ வேகத்தில் கார் சென்றதே இந்த விபரீதத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

பரிதாபமாக பறிபோன உயிர்கள்:

அதிவேகமாக வந்த அந்த வாகனம் முதலில் ககன் என்ற 26 வயது இளைஞரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது, இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் லாரியின் பின்புறம் உடைந்து, அது சாலையை விட்டு விலகி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் பாலசுப்பிரமணியம் காயங்களுடன் உயிர் தப்பினார்.

உருக்குலைந்த கார்:

விபத்துக்குள்ளான எஸ்யூவி கார் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்த நிலையில், அதில் பயணித்த 16 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களான அஹ்ராம் ஷெரீஃப், அஸ்வின் நாயர், ஈதன் ஜார்ஜ், அயன் அலி, பரத் மற்றும் முகமது ஃபர்ஹான் ஷேக் ஆகிய ஆறு பேரும் உயிரிழந்தனர்.

லாரி மீது மோதிய பிறகு, அந்த கார் சுமார் 150 மீட்டர் தூரம் விபத்துத் தடுப்புச் சுவரைத் தாண்டிச் சென்று நின்றது. இந்த விபத்து நடந்த சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, பெங்களூரு விமான நிலையத்தை நோக்கிச் சென்ற மற்றொரு கார், சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியின் மீது மோதியதில் அதில் இருந்த இருவர் லேசான காயமடைந்தனர். உயிரிழந்த மாணவர்கள் 10-ஆம் வகுப்பு மற்றும் பியூசி (PUC) பயின்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் வேக ரேடார் தரவுகளைக் கொண்டு விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
Embed widget