மேலும் அறிய

மதிய உணவு சாப்பிட்ட தொடக்கப்பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?

ஆந்திரப் பிரதேச மாநிலம், சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதிரி பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மொத்தம் 121 மாணவர்கள் நேற்று பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு வழக்கம்போல் மதிய உணவு பரிமாறப்பட்டது. அப்போது உணவு கெட்டுப் போயிருந்ததை தலைமை ஆசிரியர் சரிபார்த்துவிட்டு புதிய உணவு அளிக்குமாறு கூறியிருக்கிறார்.

இருப்பினும், அதற்குள் அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அந்த மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.வி.கிருஷ்ணா ரெட்டி, மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவர்களை நேரில் பார்த்தார். இதுதொடர்பாக தவறிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

CM Delhi Visit: டெல்லி பறக்கும் மு.க.ஸ்டாலின்...! பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க திட்டம்.! நடப்பது என்ன..?

புதிய விதிகளின்படி, மதிய உணவில் சாப்பாடு, காய்கறிகள், பருப்பு சாம்பார், முட்டை கறி, சட்னி போன்றவை இருக்க வேண்டும். வாரத்தில் குறைந்தது மூன்று முட்டைகளாவது மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். ஆந்திரப் பிரதேசத்தில் சமீப காலமாக இதுபோன்ற நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகிறது. கேட்டரிங் ஏஜென்சிகளால் மிகவும் தரம் குறைந்த உணவுகள் மாணவர்களுக்கு அளிக்கப்படுவாதாலேயே இதுபோன்று நடக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி வருகிற 28-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வந்தடைகிறார். பின்னர் 10.15 மணிக்கு சாலை மார்க்கமாக திருச்சியை அடுத்த காட்டூர் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு செல்கிறார். 

அங்கு பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில் அங்கு 'ஸ்டெம் ஆன் வீல்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்தில் பள்ளி மாணவர்களிடையே கற்றலை ஊக்குவிப்பதன் மூலம் கல்வி முறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களில் ஆங்கில வார்த்தையில் முதல் எழுத்துக்களை இணைத்து 'ஸ்டெம்' என்னும் வார்த்தை உருவகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தப் பாடங்களை தன்னார்வலர்கள் மூலம் இருசக்கர வாகனங்களில் சென்று மாணவர்களின் இருப்பிடத்திலேயே கற்றுத் தருவதற்காக ஸ்டெம் ஆன் வீல்ஸ் எனவும் பெயரிட்டுள்ளனர். இதில் இருசக்கர வாகனங்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களை கொடியசைத்து வழி அனுப்பி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி நிறைவுற்றதும் அங்கிருந்து நேராக பெரம்பலூர் எறையூர் செல்கிறார். அங்கு கோத்தாரி சர்க்கரை ஆலையில் புதிய அலகினை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பின்னர் எறையூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். இந்தப் பகுதியில் சமீபத்தில் பழங்கால மண் பானைகள், தங்க காப்புகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget