மேலும் அறிய

Chandrababu Naidu: சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி விடிய விடிய விசாரணை.. நடிகர் பவன் கல்யாண் சாலையில் படுத்து போராட்டம்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, சந்திக்க அனுமதி மறுத்ததால் நடிகர் பவன் கல்யாண் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம், சிஐடி போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

சந்திரபாபு நாயுடு கைது..!

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்து செய்யப்பட்டுள்ளார். இவருடைய ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு துறையின் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறி நேற்று காலை 6 மணியளவில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த கைதை அடுத்து, ஆந்திரா மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தால் ஆங்காங்கே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன.

விடிய விடிய விசாரணை:

சந்திரபாபு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக குடியரசு தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெலுகு தேசம் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனிடிடையே,1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு  நாயுடு மீது ஏபிசி 120(பி), 166, 167, 418, 420, 465, 468, 201, 109, சிவப்பு வித் 34 மற்றும் 37 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டு விடிய விடிய விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து, அதிகாலையில் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி மாநில குற்ற புலனாய்வு துறை தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. பாலையா உள்ளிட்ட சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் குவிந்துள்ளனர்.

பவன் கல்யாண் எதிர்ப்பு:

சந்திரபாபு நாயுடுவின் கைதிற்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களை பதிவு செய்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

சாலையில் படுத்து போராட்டம்:

சந்திரபாபுவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து, சிறப்பு விமானத்தில் விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்திற்கு செல்ல  பவன் கல்யாண் புறப்பட்டார். ஆனால், சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அவர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து, சாலை மார்க்கமாக அவர் விஜயவாடா நோக்கி புறப்பட்டபோது, அனுமஞ்சிபல்லை எனும் பகுதியில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனை கண்டித்து காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்ற பவன் கல்யாண், பின்னர் சாலையிலேயே படுத்து தூங்கி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். போலீசார் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த அவர், பாதுகாப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். இதனால், ஜனசேனா தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Mayiladuthurai: 300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Embed widget